• Jul 25 2025

ஜூனியர் என்டிஆர் கட்டியிருக்கும் இந்த வாட்சின் விலை எவ்வளவு தெரியுமா?- இந்த கம்பெனியில் தான் தயாரிக்கப்பட்டதா?

stella / 2 years ago

Advertisement

Listen News!

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் ஜூனியர் என்டிஆர் இன்று  நேவி ப்ளூ ப்ளேசர் அணிந்து மிகவும் ஸ்டைலிஷாக இருக்கும் புகைப்படங்கள் சில வற்றை வெளியிட்டார். அதில் அவர் கட்டியுள்ள வாட்ச் பற்றிய தகவலை, பலர் ரசிகர்கள் தேடிய நிலையில், இதன் விலை குறித்து பகிர்ந்துள்ளனர்.

படேக் பிலிப் என்கிற பிராண்டட் வாட்சை தான் ஜூனியர் என்டிஆர் அணிந்துள்ளார். இதன் விலை மட்டும் சுமார் 2.5 கோடி என கூறப்படுகிறது. இந்த வாட்ச் நிறுவனம் சுவிட்சர்லாந்தில் அமைந்துள்ளது. 100 வருடம் பழமை வாய்ந்த வாட்ச் கம்பெனிகளில் இதுவும் ஒன்று என்பதும் முக்கியமாகும்.


 மேலும் ஜூனியர் என்டிஆர் ஆஸ்கர் விருது விழாவில் கலந்து கொள்வதற்காக அமெரிக்காவில் இருக்கிறார். இவர் மட்டும் இன்றி, ராஜமௌலி, ராம் சரண், கீரவாணி ஆகியோரும் ஆஸ்கர் விருது விழாவில் கலந்து கொள்ள உள்ளனர். 


ராஜமௌலி இயக்கத்தில், ஜூனியர் என்டிஆர் மற்றும் ராம்சரண் நடிப்பில் வெளியான 'ஆர்ஆர்ஆர்' படத்தில் இடம்பெற்ற 'நாட்டு நாட்டு' பாடல் ஆஸ்கர் ரேஸில் உள்ளது. இந்தப் பாடல் ஆஸ்கார் விருதை வெல்ல வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாகவும் உள்ளது. ஆஸ்கர் விருது விழா நாளைய தினம்  லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள டால்பி தியேட்டரில் நடைபெறவுள்ளது. இதில் ஹாலிவுட் உட்பட உலகின் பல்வேறு மொழிகளில் உள்ள திரையுலக பிரபலங்கள் கலந்து கொள்ள உள்ளது குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement