• Jul 23 2025

மாவீரன் படத்திற்கு விஜய் சேதுபதி குரல் கொடுக்க என்ன காரணம் தெரியுமா?- இப்படியொரு விஷயம் இருக்கா?

stella / 2 years ago

Advertisement

Listen News!


மண்டேலா படத்தின் மூலம் தேசிய விருது பெற்று கவனம் ஈர்த்த இயக்குநர் தான் மடோன் அஸ்வின். இவரது இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் திரைப்படம் தான் மாவீரன்.இப்படத்தில் கதாநாயகியாக அதிதி ஷங்கர் நடித்து வருகின்றார். அத்தோடு வில்லனாக இயக்குநர் மிஷ்கின் நடிக்கின்றார்.

படம் ஜூலை 14ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. படத்தின் ட்ரெய்லர் வெளியாகி பலத்த வரவேற்பை பெற்றுள்ளது. இப்படி இருக்க கடந்த சில நாட்களுக்கு முன்பு மிஷ்கின் ஒரு பேட்டி அளித்திருந்தார். அந்தப் பேட்டியில், மாவீரன் படத்துக்கு வாய்ஸ் ஓவர் கொடுப்பதற்காக ரஜினிகாந்த், கமல் ஹாசன் உள்ளிட்டோரிடம் கேட்கப்பட்டது. ஆனால் அவர்கள் மறுத்துவிட்டார்கள். இருப்பினும் பிரபலம் ஒருவர்தான் வாய்ஸ் ஓவர் கொடுத்திருக்கிறார். அது யார் என்று இப்போதைக்கு சொல்ல முடியாது என கூறி எதிர்பார்ப்பை கூட்டினார்.


இந்தச் சூழலில் படத்தில் விஜய் சேதுபதி குரல் கொடுத்திருப்பதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. சிவகார்த்திகேயனும் தனது ட்விட்டர் பக்கத்தில், "நன்றி சகோதரர். மாவீரனில் உங்கள் குரலோடு இணைவதில் மிக்க மகிழ்ச்சி" என குறிப்பிட்டிருந்தார். அவரது இந்த ட்விட்டும், விஜய் சேதுபதி குரல் கொடுத்ததும் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.


இந்நிலையில் விஜய் சேதுபதி வாய்ஸ் கொடுத்ததற்கான காரணம் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது. அதாவது அந்த  குரலுக்கு பலரிடமும் படக்குழு பேசியிருக்கிறது. ஆனால் யாரும் ஒத்துக்கொள்ளவில்லை. இதனையடுத்து மிஷ்கின் விஜய் சேதுபதியிடம் பேசினாராம். அதனையடுத்து தான் விஜய் சேதுபதி ஒத்துக்கொண்டார் என கூறப்படுகிறது. விஜய் சேதுபதி மிஷ்கின் இயக்கத்தில் பிசாசு 2 படத்தில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement