• Jul 24 2025

என்னுடைய ஹுரோ இவர் தான் ரொம்ப எமோஷனலான தருணம்- விக்னேஷ் சிவன் பகிர்ந்த உணர்ச்சி வசமான வீடியோ

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழில் போடா போடி திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகியவர் தான் விக்னேஷ் சிவன். தொடர்ந்து, சூர்யாவை வைத்து தானா சேர்ந்த கூட்டம், விஜய் சேதுபதி நடித்த காத்து வாக்குல ரெண்டு காதல் போன்ற திரைப்படங்களை இயக்கியிருந்தார்.

இதற்கிடையில், இவர் இயக்கிய நானும் ரெளடி தான் படத்தில் நயன்தாரா நடித்ததன் மூலம் இருவருக்கும் காதல் மலர்ந்தது. அதன்பின் கடந்த ஆண்டு நடிகை நயன்தாராவை திருமணம் செய்து கொண்டார். பதிவு திருமணம், வாடகைத் தாய் என பல சர்ச்சைகளில் இருவரும் சிக்கினார்.


தற்பொழுது வரை ஹாட் டாப்பிக்கில் இருந்து வருகின்றனர். இவர்களுக்கு இரண்டு இரட்டை ஆண் குழந்தைகள் உள்ளனர். இருவரும் கேரியரில் கவனம் செலுத்தினாலும், குடும்ப வாழ்க்கையிலும் நேரம் செலவழித்து வருகின்றனர்.

இந்த நிலையில் விக்னேஷ் சிவன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஓர் வீடியோவைப் பதிவிட்டுள்ளார் அதாவது விக்னேஷ் சிவன் ரீசேர்ட்டில் டோனி தன்னுடைய சிக்னேச்சரை வைக்கிறார். இது மிகவும் எமோஷனலான தருணம் என்று கூறி விக்னேஷ் சிவன் அந்த வீடியோவைப் பகிர்ந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement