• Jul 23 2025

அஜித் விஜய் சந்திப்பு நடந்தும் ஒரு போட்டோ கூட வெளியாகாமல் போனதற்கு காரணம் என்ன தெரியுமா?- ஸ்ரிக்டான கன்டிஷன் போட்ட தளபதி

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக விளங்கும் நடிகர் அஜித்தின் தந்தை சுப்பிரமணியம் உடல்நலக்குறைவு மற்றும் வயது மூப்புக் காரணமாக நேற்று காலமானார். அவருக்கு வயது 85. அஜித்தின் அப்பா மறைவு செய்தியை அறிந்ததுமே தமிழ் சினிமா ரசிகர்கள், பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் என பலரும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தனர். 

நடிகர்கள் கமல்ஹாசன், சியான் விக்ரம், சிம்பு, பிரசன்னா உள்ளிட்ட பலர் சமூக வலைதளங்கள் வாயிலாக இரங்கல் தெரிவித்தனர்.காஷ்மீரில் லியோ படப்பிடிப்பை சமீபத்தில் முடித்து சென்னை திரும்பிய நிலையில், நடிகர் விஜய் நேரடியாகவே சென்று அஜித்துக்கு ஆறுதல் கூறினார்.


நடிகர் விஜய் ஒட்டுப் போட சைக்கிளில் வெளியே வந்தாலும் சரி, ஷூட்டிங் ஸ்பாட்டில் ரசிகர்களை சந்தித்தாலும் சரி, பனையூரில் பிரியாணி போட்டாலும் சரி உடனடியாக போட்டோக்கள் வெளியாகி தேசியளவில் டிரெண்டாகி விடுவார். ஆனால், நேற்று பல ஆண்டுகளுக்கு பிறகு நடிகர் அஜித் மற்றும் விஜய் சந்திப்பு நடந்துள்ள நிலையில், எந்தவொரு போட்டோவும் வெளியே வரவில்லை. அதற்கான காரணம் குறித்த தகவல்கள் தற்போது கசிந்துள்ளன.

நடிகர் அஜித் மற்றும் அஜித்தின் சகோதரர் இருவருமே தங்கள் தந்தையின் இறுதிச்சடங்குகள் ஒரு குடும்ப நிகழ்வாகவே நடைபெறும் என அறிவித்து விட்டனர். இந்நிலையில், நடிகர் விஜய் வருவது தெரிந்தால் மீடியாக்கள் மற்றும் ரசிகர்கள் குவிந்து விடுவார்கள் என்பதற்காகவே யாருக்கும் சொல்லாமல், தனியாக ஒரு காரில் வந்து சென்றிருக்கிறார் 


 இந்த நிகழ்வில் ஒரு பர்சன்ட் கூட பப்ளிசிட்டியாக இது மாறிவிடக் கூடாது என்பதை தனது டீமுக்கு மிகவும் கண்டிப்புடன் சொல்லித்தான் விஜய் சென்று வந்திருக்கிறாராம்.எப்படி இருந்தாலும், அஜித் வீட்டு கேட்டுக்கு முன் விஜய்யின் கார் வந்ததும் சில மீடியாக்கள் விஜய்யிடம் கீழே இறங்கி ஒரு போஸ் கொடுங்க சார் என்று கேட்ட போது கூட ப்ளீஸ் இப்போ வேண்டாம் என்று கோரிக்கை வைத்து அதனை அவாய்டு செய்துள்ளார் என தகவல்கள் கசிந்துள்ளன.



Advertisement

Advertisement