• Jul 24 2025

நடிகர் ஜெயராம் இவ்வளவு பெரிய வீட்டுத் தோட்டம் வைத்திருக்கின்றாரா?- வெளியாகிய அழகான வீடியோ

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் ,தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் நடித்து வரும் பிரபல்யமான நடிகர் தான் ஜெயராம். அதிலும் தமிழில் ரசிகர்கள் மனதில் நிலைத்து நிற்கக் கூடிய சூப்பர் ஹிட் படங்களில் நடித்திருக்கின்றார்.உதாரணத்துக்கு ஜெயராம் என்று நினைத்தாலே மக்களுக்கு தெனாலி, பஞ்ச தந்திரம் போன்ற படங்கள் நியாபகம் வந்துவிடும்.

காரணம் அந்த இரண்டு படங்களில் அவரது நடிப்பு செம காமெடியாக இருக்கும். அடுத்து நியாபகம் வரும் என்றால் அவர் கடந்த வருடம் பொன்னியின் செல்வன் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசியது தான்.


அந்த அளவிற்கு மிகவும் கலகலப்பாக சிலரது குரலில் பேசி அசத்தியிருப்பார்தற்போது நடிகர் ஜெயராம் அவர்கள் இன்ஸ்டாவில் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் அவர் தனது வீட்டில் உள்ள தோட்டத்தில் இருந்து சில காய்களை எடுக்கிறார்.அப்போது எடுக்கப்பட்ட வீடியோவை பகிர அதைப்பார்த்த ரசிகர்கள் பெரிய தோட்டமாக இருக்கிறது, சூப்பர், அழகாக உள்ளது என கமென்ட் செய்து வருகிறார்கள்.

மேலும் இவரது மகனான காளிதாஸ் ஜெயராம் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராக இருப்பதோடு அண்மையில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகியிருந்த விக்ரம் படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement