• Jul 25 2025

மூன்றாவது கணவர் மரணத்திற்கு நடிகை வனிதா விஜயகுமார் என்ன சொல்லியிருக்கிறார் தெரியுமா?- அம்மா அப்பவே சொன்னாரா?

stella / 2 years ago

Advertisement

Listen News!

வனிதா விஜயகுமார் 2000ம் ஆண்டு ஆகாஷ் என்பவருடன் திருமணம் செய்து கொண்டார். பின்னர் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு அவரை விவாகரத்து செய்தார். இதன்பின், 2007ம் ஆண்டு ஆனந்த் ஜெயராமனை திருமணம் செய்து கொண்ட வனிதா விஜயகுமார் கடந்த 2012 மன வருத்தம் காரணமாக அவரையும் பிரிந்தார்.

குடும்ப பிரச்சனை, மகன் பிரிவு, சொத்து தகராறு என ஏகப்பட்ட பிரச்சனைகளால் வனிதாவின் பெயர் டேமேஜ் ஆனது. அதே நேரம் சின்ன கேப்புக்கு பின்பு விஜய் டிவியில் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி மூலம் மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்தார். பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் அதிரடியாக பேசி போட்டியாளர்களிடையே சண்டையிட்டார். இருப்பினும் பிக் பாஸ் நிகழ்ச்சி இவருக்கு நல்ல தொடக்கமாக அமைந்தது.


பின்னர் கடந்த 2020ல் பீட்டர் பால் என்ற நபரை மூன்றாவதாக திருமணம் செய்வதாக அறிவித்தார். கொரோனா லாக்டவுன் நேரம் என்பதால் வீட்டிலேயே நடந்த திருமணத்தில் நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.அந்த திருமணத்திற்கு பிறகு பல்வேறு சர்ச்சைகளை அவர்கள் சந்தித்த நிலையில் நான்கே மாதத்தில் வனிதா பீட்டர் பாலை பிரிவதாக அறிவித்தார்.

இந்நிலையில் இன்று பீட்டர் பால் திடீரென மரணமடைந்து இருக்கிறார் என்கிற செய்தி எல்லோருக்கும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. வனிதா  பீட்டர் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்."என் அம்மா ஒரு விஷயத்தை சொல்வார். நீயே உனக்கு உதவினால் தான் கடவுளும் உனக்கு உதவுவார். இந்த பாடத்தை எல்லோரும் கற்றுக்கொள்ள வேண்டும்."


"முக்கியமான முடிவெடுக்க வேண்டிய நேரங்களில், எல்லோருமே அவரவர் பாதையை தேர்வு செய்கிறார்கள். நீங்கள் சந்தித்த துயரங்கள் உடன் போராடி தற்போது அமைதியை அடைந்திருப்பீர்கள் என நிச்சயம் நம்புகிறேன்.""நீங்கள் இந்த உலகத்தை விட்டு சென்றதற்காக வருத்தப்படும் அதே நேரத்தில், நீங்க இப்போது சிறந்த, அமைதியான இடத்தில் இருப்பீர்கள் என எனக்கு தெரியும். எங்கே இருந்தாலும் மகிழ்ச்சியாக இருங்கள்" என வனிதா குறிப்பிட்டு இருக்கிறார். 


Advertisement

Advertisement