• Jul 26 2025

பிக்பாஸ் வீட்டிற்கு வந்த அசீம் நண்பர்கள் விக்ரமனிடம் என்ன சொன்னார்கள் தெரியுமா?- கடுப்பான அமுதவாணன்

stella / 2 years ago

Advertisement

Listen News!


பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் போட்டியாளர்களின் குடும்பத்தினர் வருகை தந்திருந்தனர். இறுதியாகவே அசீமின் நண்பர்கள் வருகை தந்திருந்தார்கள். எனவே அசீமைப் பார்க்க வந்த அவரது சகோதரனும் நண்பனும் ஜாலியாக பேசிக் கொண்டிருந்தார்கள்.

இதற்கு மத்தியில், அசீம் நண்பர் விக்ரமனிடம் பேசிய விஷயமும், அதற்கு அமுதவாணன் கொடுத்த கவுண்டரும் அதிக வைரலாகி வருகிறது. பிக் பாஸ் வீட்டில் வந்த அசீம் நண்பர், விக்ரமனிடம் கைகொடுத்து அவர் சிறப்பாக விளையாடுவதாக பாராட்டி இருந்தார்.


 இதனைக் ஏடிகே, அமுதவாணன், மணிகண்டா மற்றும் மைனா நந்தினி உள்ளிட்டோர் கவனித்து கொண்டும் இருந்தனர்.இதற்கடுத்து அசீம் நண்பனை அழைக்கும் அமுதவாணன், "எனக்கு நல்ல பேருன்னு சொன்னியா. மைனாக்கு நல்ல பேருன்னு சொன்னியா. மணிக்கு நல்ல பேருன்னு சொன்னியா. ஆனா அவருக்கு (விக்ரமன்) போயி நல்ல பேருன்னு சொல்லி கட்டிப் புடிச்சேன்" என ஜாலியாக விக்ரமனை தனியாக பாராட்டியதை அவர்கள் குறிப்பிட்டுக் கொண்டிருக்கின்றனர்.

 இதே போல அசீம் தம்பி கூட விக்ரமன் சிறப்பாக விளையாடுவதையும் குறிப்பிட்டு அவரை பாராட்டவும் செய்தார். இதே போல விக்கரமனின் பெற்றோர் வந்தபோது அசீம் மன்னிப்புக் கேட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement