• Jul 25 2025

நடிகர் ஜித்தன் ரமேஷின் மகளா இது... யாருன்னு பார்த்தா ஷாக் ஆகிடுவீங்க..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தற்போது பெரும்பாலும் சின்னத்திரை ரசிகர்களை மகிழ்வித்து வரும் டிவி நிகழ்ச்சி என்றால் அது பிக்பாஸ் நிகழ்ச்சி தான். கிட்டத்தட்ட பல லட்சம் பேரால் பார்க்கப்பட்டு வரும் இந்த நிகழ்ச்சிக்கென்றே ஒரு மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது என்று தான் கூற வேண்டும்.. மூன்று மாதங்கள் மட்டுமே இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பபட்டாலும் அந்த மூன்று மாதங்களும் டி ஆர் பி யில் முதலிடத்தை பிடிப்பது இந்த நிகழ்ச்சி தான் .மேலும் இப்படி கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பு அறிமுகமான இந்த பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ஆரம்பத்தில் ரசிகர்களிடமிருந்து பெரியதாக வரவேற்ப்பு இல்லாமல் இருந்தாலும் போக போக இந்த நிகழ்ச்சியினை விரும்பி பார்த்து வருகின்றனர்.

இந்த நிகழ்ச்சியில் வழக்கம் போல பல திரைப்பிரபலங்களும், சின்னத்திரை பிரபங்களும், மாடல் நடிகர்களும் என பலரும் கலந்து கொண்டனர்.தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சி 6வது சீசன் ஒளிபரப்பாகி வருகின்றது.

மேலும் இப்படி  முந்தைய பிக்பாஸ் சீசனில் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டவர் தான் நடிகர் ஜித்தன் ரமேஷ். பிரபல தயாரிப்பலரனா ஆர் பி சவுத்திரியின் மகனான இவர் ஜித்தன் திரைபபடம் மூலம் தமிழ் சினிமாவில் நுழைந்தார்.அத்தோடு  முதல் திரைப்படமே வித்யாசமான திரைபப்டமாக இருந்ததால் இவருக்கு நல்ல வரவேற்ப்பு கிடைக்கவே அடுத்தடுத்த படங்களில் நடிக்க தொடங்கிய இவருக்கு அந்த திரைபபடங்கள் சரியாக போகவில்லை.

இப்படி இது வரை பத்துக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள ஜித்தன் ரமேஷ் பட வாய்ப்பில்லாமல் சிறிது காலம் திரையுலகை விட்டு ஒதுங்கி இருந்தார். இவ்வாறுஇருக்கையில்  இந்த பிக்பாஸ் வாய்ப்பை பயன்படுத்திக் கொண்ட இவர் ஆரம்பத்தில் இருந்தே யார் மீதும் எந்த வம்புமில்லாமல் அமைதியான போட்டியாளராக இருந்து வநதார்.

இதன் பின்னர் கிட்டத்தட்ட எழுபது நாட்கள் பிக்பாஸ் வீட்டுக்குள் இருந்த இவர் எவிக்சன் காரணமாக வெளியேற்றப்பட்டார்.இவ்வாறு பலராலும் அறியப்பட்ட இவரின் குடும்ப புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.




Advertisement

Advertisement