• Jul 25 2025

நடிகர் அஜித்தின் உடல் எடை அதிகரிக்க காரணம் என்ன தெரியுமா?- இப்படியொரு விஷயம் செய்கின்றாரா?

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முன்னனி நடிகராக வலம் வருபவர் அஜித். இப்போது ஒட்டுமொத்தரசிகர்களையும் தன்னுள் அடக்கி கொண்டுள்ளார் அஜித். தன்னைத்தானே செதுக்கி கொண்டுள்ள அஜித் இன்று ஒட்டுமொத்த தமிழகமும் கொண்டாடும் நடிகராக இருந்து வருகிறார்.

ஆரம்பகாலங்களில் பார்ப்பதற்கு மிகவும் ஷார்மிங்காக சாக்லேட் பாயாக ஒரு காலேஜ் பாய் லுக்கில் இருப்பார் அஜித். அதன் காரணமாகவே இளம் பெண்களுக்கு மிகவும் பிடித்த நடிகராக வலம் வந்தார், நாளை அஜித் அவரது பிறந்த நாளை கொண்டாட இருக்கிறார்.


ஆனால் தற்சமயம் அஜித் நேபாளத்தில் சுற்றுப் பயணத்தில் இருக்கிறார். 8 ஆம் தேதி தான் சென்னைக்கே வருகிறாராம். மேலும் அவரின் ஏகே 62 படத்தின் தலைப்பும் இயக்குநரை பற்றிய அதிகாரப்பூர்வ தகவலும் நாளை தான் வெளியாக உள்ளதாம். அவர் சென்னை வந்த பிறகு தான் ஜூன் மாதத்தில் இருந்து படப்பிடிப்பு ஆர்ம்பமாக இருக்கிறதாம்.

இந்த நிலையில் அஜித்தின் உடலைமைப்பை பற்றிய ஒரு உண்மையை வலைப்பேச்சு பிஸ்மி கூறினார். அதாவது ஒரு சமயம் பிஸ்மி அஜித்துடன் நெருக்கமாக இருந்த நேரத்தில் ‘என்ன அஜித் தொழ தொழனு உடம்பு இருக்கே? குறைக்க கூடாதா?’ என கேட்டாராம்.


அதற்கு அஜித் ‘ஸ்பைனல் கார்டு பிரச்சினை இருப்பதால் அளவுக்கதிகமாக மாத்திரைகளை உண்கின்றாராம். அதில் அதிகமான ஸ்டீராய்டுகள் இருக்கிறதாம். அது அதிகமானால் உடம்பு வெயிட் போடுமாம்.’ என்று கூறியிருக்கிறார். அதன் பிறகு திருப்பதி மற்றும் பரமசிவம் போன்ற படங்களில் நடிக்கும் போது மிகவும் ஒல்லியாக இருப்பார்.


Advertisement

Advertisement