• Jul 24 2025

நயன்தாராவின் கனெக்ட் திரைப்படத்தின் ட்ரெய்லரைப் பார்த்து மெர்சலான ஜான்வி கபூர்- விக்னேஷ் சிவன் என்ன சொன்னார் தெரியுமா?

stella / 2 years ago

Advertisement

Listen News!


நயன்தாரா நடிப்பில் வெளியான மாயா என்னும் திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறியப்பட்டவர் தான் அஸ்வின் சரவணன். இப்படத்தைத் தொடர்ந்து 2019 ஆம் ஆண்டு டாப்சி நடிப்பில் கேம் ஓவர் படத்தை இயக்கினார்.இந்தப் படத்தில், மர்மமான ஊடுருவல்காரர்களிடமிருந்து தனது வீட்டைப் பாதுகாக்கும் PTSD உடைய பெண்ணாக டாப்ஸி நடித்திருப்பார்.

தற்போது அஸ்வின் சரவணன் நயன்தாரா நடிப்பில் கனெக்ட் படத்தை இயக்கி முடித்துள்ளார். இந்த படத்தில் அனுபம் கேர், வினய், சத்யராஜ் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு பிரித்வி சந்திரசேகர் இசையமைக்கிறார்.நடிகை நயன்தாராவின் பிறந்தநாளை முன்னிட்டு இந்த படத்தின் டீஸர் வெளியானது.


 இந்த திரைப்படம் வரும் டிசம்பர் 22.12.2022 அன்று திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு சென்சார் போர்டு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது. மேலும் இந்த படம் 99 நிமிடங்கள் ஓடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இடைவேளை இல்லாத தமிழ்த் திரைப்படமாக இந்த படம் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.


 இந்த ட்ரெய்லர் குறித்து நடிகை ஜான்வி கபூர் கூறியதாவது, "இந்த படத்தை பார்க்க ஆவலாக உள்ளேன். கனெக்ட் ட்ரெய்லர் அருமையாக உள்ளது" என விக்னேஷ் சிவனை டேக் செய்து குறிப்பிட்டுள்ளார்.இதற்கு பதில் அளித்த விக்னேஷ் சிவன், "நன்றி ஜான்வி..‌உங்களுக்கு ட்ரெய்லர் பிடித்தது மகிழ்ச்சி அளிக்கிறது." என குறிப்பிட்டுள்ளார்.





Advertisement

Advertisement