• Jul 25 2025

விக்ரமனுக்கு ஆதரவாகப் பேசிய மைனாவின் கணவர்.. என்ன கூறியுள்ளார் தெரியுமா..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் நிகழ்ச்சியானது 5சீசன்களை வெற்றிகரமாக கடந்து விட்ட நிலையில் இதன் 6ஆவது சீசனானது தற்போது ஒளிபரப்பாகி வருகின்றது. ஏனைய சீசன்களைப் போலவே இந்த சீசனும் விறுவிறுப்பிற்கும், பரபரப்பிற்கும் பஞ்சமில்லாமல் நகர்ந்து சென்ற வண்ணம் இருக்கின்றது.

அந்தவகையில் இன்றைய தினம் பிக்பாஸ் வீட்டிற்குள் போட்டியாளர்களின் உறவினர்கள் நுழைந்துள்ளார்கள். அதில் மைனாவின் குடும்பமும் ஒன்று. மைனாவின் கணவர் மற்றும் மகன் வருகை தந்துள்ளனர்.


அதில் மைனாவின் கணவர் " உனக்கு கேம் விளயாடத் தெரியல, இதுக்கு நீ லாயக் இல்லை, எதுவாக இருந்தாலும் ஓப்பனாக பேசு" என்கிறார். மக்கள் உன்னை வெளிய அனுப்பினால் உனக்கு கேம் விளையாடத் தெரியல என்பதை நீ ஏற்றுக்கொள் எனவும் கூறியுள்ளார்.

மேலும் டாஸ்க்கில் எப்படி ஜெயிக்கணும் என்பதை மட்டுமே யோசி, உனக்கு ஒரு விஷயம் தப்பு என்று பட்டால் அதை தட்டிக் கேளு, பயம் வேணாம், அந்தப் பயத்தை எடுத்திடு எனவும் மைனாவிடம் கூறிஉள்ளார். அசீம் கூடவும், விக்ரமன் கூடவும் சண்டை போட்டிட்டு என் அடுத்தநாளே பேசினாய், எங்கிட்ட என்றால் 3நாளைக்கு பேச மாட்டியே எனவும் கேட்டுள்ளார்.


அத்தோடு விக்ரமன் பற்றியும் உயர்வாகப் பேசியுள்ளார் மைனாவின் கணவர். அதாவது "விக்ரமைப் பாரு, அவர் யாரையுமே பாக்கிறதில்லை, எல்லா கருத்தையும் முன் வைக்கின்றார், அதேபோல் கேளு" எனவும் விக்ரமனுக்கு ஆதரவு தெரிவித்து பேசி இருக்கின்றார். இந்த விடயமானது தற்போது சமூக வலைத்தளங்களில் பேசு பொருளாக மாறி வருகின்றது.

Advertisement

Advertisement