• Jul 24 2025

23 கோடி செலவழித்தும் வீணாகிடிச்சே... நஷ்டத்தில் 'லத்தி' படக்குழு...!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

விஷால் நடிப்பில் தற்போது வெளியாகியுள்ள திரைப்படம் தான் 'லத்தி'. இத் திரைப்படமானது ஏற்கனவே ஒருமுறை ரிலீஸ் தேதி தள்ளிப்போன நிலையில் தான் பின்னர் வெளியானது. அத்தோடு வினோத் குமார் என்பவர் இந்தப் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகியுள்ளார்.

மேலும் விஷால் போலீஸாக நடித்து அசத்தியுள்ள இந்தப் படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். அதுமட்டுமல்லாது விஷால் - யுவன் கூட்டணியில் உருவாகும் 15-ஆவது படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு விஷால் போலீஷாக நடித்து ஆக்‌ஷன் ஜானரில் உருவான இந்தப் படம் மிகப் பெரிய வெற்றிப் பெறும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்டது. 


அத்தோடு விஷாலும் தனக்கு இது ஒரு கம்பேக் படமாக இருக்கும் என்ற நம்பிக்கையில் இருந்தார். ஆனால் லத்தி திரைப்படம் விஷாலின் எதிர்பார்ப்பு அனைத்தையும் பொய்யாக்கியுள்ளதாக சொல்லப்படுகிறது. அந்தவகையில் விஷால் ஜோடியாக சுனைனா நடித்துள்ள இந்தப் படம் கடந்த 22-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

இந்நிலையில் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் லத்தி சற்று பின்னடைவை சந்தித்துள்ளது. இத்திரைப்படம் முதல்நாளில் தமிழகத்தில் வெறும் 2 கோடி ரூபாய் அளவுக்கு மட்டுமே வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதுமட்டுமல்லாது 23கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட இந்த படம் தமிழகத்தில் வெறும் 3.40 கோடியை மட்டுமே வசூலித்து பல கோடி நஷ்டத்தை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement

Advertisement