• Jul 25 2025

ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு வளர்ந்த பூவையார்... இப்போ என்ன படிக்கிறார் தெரியுமா...? கேட்டதும் ஷாக்கான மாகாபா... வீடியோ இதோ..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ஒரு ஹிட் நிகழ்ச்சி தான் 'சூப்பர் சிங்கர்'. இந்த நிகழ்ச்சியை அடித்துக் கொள்ள இதுவரை எந்த நிகழ்ச்சியும் இல்லை என்றுதான் கூற வேண்டும். அந்தளவிற்கு ஒவ்வொரு வருடமும் வித்தியாசமாக நிகழ்ச்சியை கொண்டு போகிறார்கள்.

இது ஒரு பாடும் நிகழ்ச்சியாக இருந்தாலும் இதன் மூலம் பலரது வாழ்க்கையையே மாற்றியுள்ளனர். அப்படி பல பேரை உதாரணத்திற்கு கூறலாம். அந்தவகையில் இதே சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் இப்போது மக்களின் பேவரெட் பாடகராக வலம் வருகிறார் பூவையார். 



இவர் ஒரு சின்ன பையனாக நுழைந்து டிவியையே ஒரு கலக்கு கலக்கிய இவர் இப்போது படங்களில் நடிப்பது, பாடல்கள் பாடுவது என பிஸியாக இருக்கிறார். குறிப்பாக விஜய்யின் பிகில் பட பாடலில் கூட வருவார். 

இந்நிலையில் தற்போது பூவையார் சூப்பர் சிங்கர் ஜூனியர் ஒவ்வொரு குரலும் ஒரு கதை சொல்லும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். அதில் மாகாபா பூவையாரிடம் எத்தனையாவது இப்போ படிக்கிறாய் எனக் கேட்கின்றார். அதற்கு பூவையார் "12 முடிச்சு காலேஜ் படிப்பதாக கூறுகின்றார். இதனைக் கேட்டதும் மாகாபா மற்றும் குரேஷி ஆச்சர்யத்தில் மூழ்கின்றனர்.



இது குறித்த ப்ரோமோ வீடியோ இதோ..! 


Advertisement

Advertisement