• Jul 25 2025

சுந்தரியிடம் உண்மை எல்லாம் கேட்கப்போறேன் எனக் கிளம்பிய அனு- மாமாவிடம் மாட்டிக் கொண்ட கிருஷ்ணா- பதற்றத்தில் கார்த்திக்

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சின்னத்திரையின் ஆரம்ப காலத்திலிருந்து பல சூப்பர் ஹிட் சீரியல்களை ஒளிபரப்பாக்குவதில் சன்டிவி முதலிடம் வகிக்கின்றது. அந்த வகையில் இதில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் சுந்தரி.

இந்த சீரியலில் கார்த்திக் அனு சுந்தரி என்ற இரண்டு பெண்களைத் திருமணம் செய்து கொண்டு சுந்தரிக்கு எதிராக பல தடைகளையும் செய்து வருகின்றார். இருப்பினும் தனது கணவன் தனக்கு எதிராகத் தீட்டும் சதித் திட்டங்களை எல்லாம் முறியடித்து தனது வாழ்க்கையில் எப்படி முன்னேறப்போகின்றார் என்பதையே இந்த சீரியல் எடுத்துக் காட்டுகின்றது.


இதில் சுந்தரி பல தடைகளைத் தாண்டி பரீட்சையினை எழுதி முடித்து விட்டார். கார்த்திக்கின் நம்பரை சுந்தரி தனது கணவனின் நம்பர் என்று சொல்லிக் கொடுத்ததால் கார்த்திக் வர அனு இந்த விடயம் குறித்து கேட்க கார்த்திக் சுந்தரி தன்மீது ஆசைப்படுவது போல சுந்தரி பற்றி தவறாக சொல்லி சமாளித்து விடுகின்றார்.


இருப்பினும் இது பற்றிய உண்மையான தகவலை அறிய சுந்தரியைப் போய் பார்க்கனும் என்று அனு சொல்கின்றார். மறுபுறம் கிருஷ்ணா அனுவிடம் கட்டாயம் உண்மை எல்லாம் சொல்லியே தீருவேன் என அவரது வீட்டுக்கு வருகின்றார். இது குறித்த ப்ரோமோ தற்பொழுது வைரலாகி வருவதைக் காணலாம்.

Advertisement

Advertisement