• Jul 25 2025

உயிரிழந்த ரசிகர்கள்... வீடியோ காலில் வந்த சூர்யா... கண் கலங்கி என்ன கூறியுள்ளார் தெரியுமா..? வீடியோ இதோ..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான சூர்யாவிற்குத் தமிழ் மொழியைத் தாண்டி, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா எனப் பல இடங்களிலும் ரசிகர்கள் உள்ளனர். அந்தவகையில் சூர்யாவின் பிறந்த நாளை முன்னிட்டு நேற்றைய தினம் அவரது ரசிகர்கள் கேக் வெட்டி வெகு விமரிசையாக கொண்டாடி இருந்தனர்.


இவ்வாறு சூர்யாவின் பிறந்த நாளை முன்னிட்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்ட அவரது ரசிகர்கள் இருவர் நேற்றைய தினம் எதிர்பாராத விதமாக உயிரிழந்துள்ளனர். அதாவது ஆந்திர மாநிலம் நாசராவ் பேட்டையில் சூர்யாவின் பிறந்தநாளுக்காகப் பேனர் கட்டும்போது இரும்பு கம்பி அருகிலிருந்த மின்கம்பி மீது உரசியதில் மின்சாரம் தாக்கி கல்லூரி மாணவர்களான வெங்கடேஷ், சாய் ஆகிய இருவரும் உயிரிழந்துள்ளனர்.

இந்த விடயமானது சூர்யாவை மனதளவில் பெரிதும் பாதித்துள்ளது. இதனைத் தொடர்ந்து உயிரிழந்த ரசிகர்களின் குடும்பத்தினரை வீடியோ காலில் தொடர்பு கொண்டு பேசிய சூர்யா இந்த இழப்பு தன்னை மிகவும் பாதித்ததாகவும், இரு தம்பிகளை இழந்திருப்பதாகவும் மண வேதனையுடன் கூறினார்.


அதுமட்டுமல்லாது உயிரிழந்த ரசிகர்களின் குடும்பங்களுக்கு வேண்டிய உதவிகளை செய்வதாகவும் ஆறுதல் தெரிவித்து இருக்கின்றார். இது குறித்த வீடியோ ஆனது தற்போது சமூக வலைத்தளங்களில் படு வைரலாகி வருகின்றது.


Advertisement

Advertisement