• Jul 24 2025

ஹப்பி பர்த்டே விஜய் ஆண்டனி...சொத்து மதிப்பு மட்டும் இத்தனை கோடியா?

Jo / 1 year ago

Advertisement

Listen News!

எந்தவொரு சினிமா பின்னணியும் எதுவுமே இல்லாமல் தமிழ் சினிமாவில் கலக்கிக் கொண்டிருக்கும் விஜய் ஆண்டனி இன்று தன்னுடைய பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கிய சுக்ரன் படத்தின் மூலம் இசையமைப்பாளராக தமிழ் சினிமாவில் நுழைந்தார் விஜய் ஆண்டனி.

தொடர்ந்து டிஷ்யூம், நான் அவனில்லை, நினைத்தாலே இனிக்கும் போன்ற படங்களில் விஜய் ஆண்டனியின் பாடல்கள் ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்தன.குறிப்பாக காதலில்' விழுந்தேன் விழுந்தேன் படத்தில் 'உன் தலைமுடி உதிர்வதைக்கூட தாங்கமுடியாது அன்பே' பாடல் மெலோடியின் உச்சம் என்றால், 'அட்ரா அட்ரா நாக்குமுக்க' பாடல் இறங்கி ஆட்டம் போட வைத்தது. 

இப்படி தனது புதுமையான இசையால் ரசிகர்களை வசியம் செய்த விஜய் ஆண்டனி, 'நான்' திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் நடிகரானார். 

 விஜய் ஆண்டனிக்கு சென்னையில் 5 கோடி ரூபாய் மதிப்புள்ள ஒரு பங்களாவும், பெங்களுரில் 3 கோடியில் ஒரு வீடும், அதே போல பிஎம்டபியூ போன்ற விலை உயர்ந்த நான்கு சொகுசு காரை வைத்து இருக்கும் விஜய் ஆண்டனியின் மொத்த சொத்தின் மதிப்பு 55 கோடி இருக்கும் என கூறப்படுகிறது.

Advertisement

Advertisement