• Jul 24 2025

காவாலயா பாடலில் தமன்னாவின் ஐட்டம் டான்ஸ்சைப் பார்த்த அவரது காதலன் என்ன சொல்லியிருக்கிறார் தெரியுமா?

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்த தமன்னா, தற்போது கோலிவுட்டில் மார்க்கெட் போனதால் பாலிவுட் பக்கம் சென்றுவிட்டார். அங்கு அவருக்கு அடுத்தடுத்து வெப் தொடரில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதன்படி ஜீ கர்தா மற்றும் லஸ்ட் ஸ்டோரீஸ் 2 என அடுத்தடுத்து 2 வெப் தொடர்களில் நடித்தார் தமன்னா. 

இந்த இரண்டு வெப் தொடர்களும் கடந்த மாதம் ரிலீஸ் ஆகி சோசியல் மீடியாவில் பேசு பொருள் ஆனது.இதற்கு காரணம் இந்த இரண்டு வெப் தொடர்களிலுமே நடிகை தமன்னா ஆபாசமான படுக்கையறை காட்சிகளில் நடித்திருந்தது தான். இதுவரை எந்த நடிகருடனுடன் லிப்லாக் முத்தக்காட்சியில் நடிக்கமாட்டேன் என்கிற பாலிசி உடன் இருந்து வந்தார் தமன்னா, 


லஸ்ட் ஸ்டோரீஸ் 2 வெப் தொடருக்காக அதையெல்லாம் தகர்த்தெறிந்து, தன்னுடைய காதலன் விஜய் வர்மாவுடன் லிப்லாக் முத்தக்காட்சியில் நடித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.அதுமட்டுமின்றி ஜீ கர்தா என்கிற வெப் தொடரில் மேலாடையின்றி நிர்வாணமாகவே படுக்கையறை காட்சியில் நடித்திருந்தார் தமன்னா. அவரின் இந்த ஓவர்டோஸ் கவர்ச்சி ரசிகர்களுக்கு மட்டுமல்லாது திரையுலகினருக்கே சர்ப்ரைஸ் ஆக இருந்தது.


தமன்னா தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் ஜெயிலர் படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் முதலாவது சிங்கிள் பாடலான காவாலயா பாடல் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருந்தது. இந்த நிலையில் இப்பாடலைப் பார்த்த தமன்னாவின் காதலனான விஜய் வர்மா அந்த பாட்டு செம பயராக இருக்கு என்று பதிவிட்ட தமன்னாவுக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement