• Jul 25 2025

சொன்ன சொல்லை காப்பாற்றிய அசீம் - குவியும் வாழ்த்துகள்..! என்ன செய்திருக்காருன்னு பாருங்க..!

Jo / 2 years ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் 6 ஆவது சீசன் இந்த ஆண்டு நிறைவடைந்தது. இதில் அசீம் டைட்டில் பட்டத்தை தட்டிச்சென்றார். இரண்டாவதது, மூன்றாவது இடத்தை விக்ரமன் மற்றும் ஷிவின் பிடித்தனர். அசீம் வெற்றிப் பெற்றது குறித்து ஒரு பக்கம் வாழ்த்துகள் குவிந்து வந்தாலும் மறுபக்கம் பலத்த எதிர்ப்பு எழுந்து இருக்கிறது.

அப்போது அவர் தான் வென்ற பணத்தை என்ன செய்யப்போகிறேன் என பேசி இருந்தார். அதில், ““எம் மக்களுக்கு வணக்கம். பல்வேறு தளங்களில் உங்கள் ஆதரவு வருவதைக் கண்டு நான் திகைத்து நிற்கின்றேன். உங்கள் அன்புக்கு மிக்க நன்றி மக்களே. எம் மக்களை உயிர் உள்ளவரை நான் மறவேன். நான் பெற்ற அன்பிற்கும், ஆதரவிற்கும் நன்றி.

நான் உறுதியளித்தபடி, எனது வெற்றித் தொகையில் 25,00,000 லட்சம் ரூபாய்யை கோவிட்-19 காலத்தில் பெற்றோரை இழந்த குழந்தைகளின் கல்விக்காக கொடுக்கிறேன். இது எனது ஆரம்பம், நீங்கள் எனக்கு அளித்த அன்பை சமூகத்திற்கு திருப்பித் தருகிறேன். என்றென்றும் நான் உங்கள் அனைவருக்கும் பேரானந்தமாக இருப்பேன்” என குறிப்பிட்டு இருந்தார்.

இந்நிலையில் அசீம் தன்னுடையை பெயரில் அறக்கட்டளை ஒன்றை ஆரம்பித்து கொடுத்த வாக்கை நிருப்பித்து காட்டி உள்ளார். அந்த அறக்கட்டளையின் மூலம் அசீம் பல மாணவர்களுக்கு கல்வி உதவி த்தொகையை வழங்கி உள்ளார். அசீமின் இந்த செயலை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.


Advertisement

Advertisement