• Jul 24 2025

ரஜினியின் அந்தப் படத்தை பார்த்து மறைந்த நடிகை ஜெயலலிதா என்ன சொன்னார் தெரியுமா?- இதுவரை தெரியாமல் போச்சே

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் பஸ் நடத்துனராக இருந்து சூப்பர் ஸ்டார் என்ற பெருமையை பெற்று தவிர்க்க முடியாத நடிகராக வலம் வருபவர் தான் ரஜினிகாந்த். இவர் தற்பொழுது இயக்குநர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் ஜெயிலர் என்னும் திரைப்படத்தில் நடித்து வருகின்றார்.

இப்படத்தின் படப்பிடிப்பும் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதால் இந்த ஆண்டு படம் வளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும் ரஜினிகாந்தின் சூப்பர் ஹிட் படங்கள் வரிசையில் ஒன்றாக இருப்பது படையப்பா.இப்படத்தினை கே.ஸ் ரவிக்குமார் இயக்கியிருந்தார்.


கடந்த 1999ம் ஆண்டு வெளியாd இப்படத்தில் ரஜினிகாந்துடன் இணைந்து சௌந்தர்யா ரம்யா கிருஷ்ணன்  ராதா ரவி, செந்தில், நாசர், மணிவண்ணன் என பல நட்சத்திரங்ககளும் நடித்திருந்தனர்.இப்படத்தில் முக்கியமான நீலாம்பரி கதாபாத்திரத்தில் அசத்தலாக தன் நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார் நடிகை ரம்யா கிருஷ்ணன்.

இந்த திரைப்படம் தமிழ் திரைதுறை மற்றுமின்றி தெலுங்கு திரைத்துறையிலும் மாபெரும் வெற்றி பெற்றது.இந்நிலையில் கே ஸ் ரவிக்குமார் அளித்த பேட்டி ஒன்றில் படையப்பா படத்தை பற்றி பல விஷயம் பகிர்ந்திருந்தார்.

இப்படத்தை நடிகையும், மறைந்த முன்னாள் முதல் அமைச்சருமான செல்வி ஜெ. ஜெயலலிதா பார்த்து விட்டு "படம் சூப்பராக இருந்தது, இப்படத்தின் ஹைலைட் நீலாம்பரி கதாபாத்திரம் தான்" என ரஜினியிடம் கூறியதாக கே.ஸ் ரவிக்குமார் தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Advertisement