• Jul 24 2025

அது எனக்குமே சர்ப்ரைஸாக தான் இருந்திச்சு- தியேட்டர்ல பார்க்கணும்- துணிவு படத்திற்காக காத்திருக்கும் மஞ்சுவாரியார்

stella / 2 years ago

Advertisement

Listen News!

H.வினோத்- போனிகபூர் மூன்றாவது முறையாக இணையும் படம்  'துணிவு'.இப்படத்தின் படப்பிடிப்பானது ஐதராபாத், சென்னை, விசாகப்பட்டினம், பேங்காக் ஆகிய  நகர்களில் இடம் பெற்றது.இந்த படத்தில் நடிகை மஞ்சு வாரியர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றார்..

அதே போல நடிகர் ஜான் கொக்கன் நடிகர் வீரா, சமுத்திரக்கனி, மகாநதி சங்கர், பிக்பாஸ் பிரபலங்களான பவனி & அமீர் ஆகியோரும் நடித்துள்ளனர்.இந்த படத்தின் கலை இயக்குநராக மிலன் பணிபுரிய, சண்டை காட்சிகளை சுப்ரீம் சுந்தர் வடிவமைப்பு செய்கிறார்‌‌.  இந்த படத்தின் இசையமைப்பாளராக ஜிப்ரான் பணிபுரிகிறார்.


 எடிட்டராக விஜய் வேலுக்குட்டி பணிபுரிகிறார்.துணிவு படத்தின் தமிழக ரிலீஸ் உரிமத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளது. அத்தோடு சமீபத்தில் இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருந்தது. இதுவரை 54 மில்லியன் பார்வையாளர்களை கடந்து வைரலாகி வருகிறது.

இந்நிலையில் பிரபல சேனலுக்கு பிரத்யேகமான பேட்டி ஒன்றை நடிகை மஞ்சு வாரியர் அளித்துள்ளார். துணிவு படத்தில் நடிகை மஞ்சு வாரியர் 'கண்மணி' எனும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.இந்த பேட்டியில், "துணிவு ட்ரெய்லரில் சர்ப்ரைஸாக இருந்தது வங்கி உள்ள அஜித் சார் துப்பாக்கியை கையில் வச்சுட்டு டான்ஸ் ஆடுறார். அது பத்தி என்ன நினைக்கிறீங்க? என்ற கேள்விக்கு மஞ்சு வாரியர், "அந்த சீன் எடுக்கும் போது நான் இல்லை. அப்புறம் அந்த சீன் பத்தி சார் நல்லா வந்திருக்குனு சொல்லிருந்தார். ட்ரெய்லர்ல தான் நான் பாத்தேன். இன்னும் நிறைய இந்த சீனை தியேட்டரில் பார்க்க ஆவலோடு இருக்கேன்" என பதில் அளித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement