• Jul 24 2025

த்ரிஷா என்ற பெயரின் அர்த்தம் என்ன தெரியுமா?- அவரே கூறிய சுவாரஸியமான தகவல்- அடடே இதுவும் நல்லாத் தான் இருக்கு

stella / 2 years ago

Advertisement

Listen News!

மெளனம் பேசியதே படத்தில் அறிமுகமான த்ரிஷா சாமி, கில்லி, திருப்பாச்சி, குருவி, கிரீடம், மங்காத்தா, விண்ணைத் தாண்டி வருவாயா, பேட்ட, 96, பொன்னியின் செல்வன், பொன்னியின் செல்வன் 2 மற்றும் லியோ என பல ஆண்டுகளாக தமிழ் சினிமா ரசிகர்களின் கனவுக்கன்னியாக ஜொலித்து வருகிறார்.

இன்னமும் திருமணம் செய்துக் கொள்ளாமல் இருக்கும் நடிகை த்ரிஷா கோலிவுட்டின் எவர்க்ரீன் பியூட்டியாக கெத்துக் காட்டி வருகிறார். பொன்னியின் செல்வன் 2 ப்ரமோஷனுக்காக பட்டுச் சேலைகளை அணிந்து கொண்டு த்ரிஷா செய்த ப்ரமோஷன்களை பார்த்து பல ரசிகர்கள் பித்துப் பிடித்துப் போயுள்ளனர்.


இந்த நிலையில் த்ரிஷா நேற்றைய தினம் தனது 40வது பிறந்தநாளைக் கொண்டாடி இருந்தார்.இதனால் லியோ படத்தில் நடிகர் விஜய்யுடன் நடித்து வரும் த்ரிஷா அவருடன் பேக்கரி ஒன்றில் இருக்கும் லியோ படத்தின் பிரத்யேக ஸ்டில்லை செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோ தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு பிறந்த நாள் வாழ்த்தினைத் தெரிவித்திருந்தது.


இப்படியான நிலையில் த்ரிஷா அண்மையில் ஒரு பேட்டியளித்திருந்தார். அதில் த்ரிஷா என்ற பெயருக்க என்ன அர்த்தம் என்று கேட்கப்பட்டது. அதற்கு பதில் கூறிய த்ரிஷா எனக்கு தெரிஞ்சு இதற்கு நிறைய அர்த்தம் இருக்கு. ஆனால் முதல்ல நாள் கேள்விப் பட்டது வெற்றி என்று தான். அதனால் த்ரிஷா என்பது வெற்றி என்று தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement