• Jul 26 2025

பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி ஒளிபரப்பப்படவுள்ள டைம் என்ன தெரியுமா?- வெளியாகிய அதிகாரப்பூர்வ தகவல்

stella / 1 year ago

Advertisement

Listen News!


பிக் பாஸ் நிகழ்ச்சி துவங்கியதில் இருந்தே, உலக அளவில் இந்த நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. குறிப்பாக பிக்பாஸ் நிகழ்ச்சி துவங்கப்பட்டால், மற்ற தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பல ரியாலிட்டி ஷோக்களின் டிஆர்பி பலத்த அடி வாங்கும் என்கிற பயம், மற்ற சேனல்களுக்கு அதிகமாகவே உண்டு.

 எனவே பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு போட்டியாக சில நிகழ்ச்சிகளை அவர்கள் களமிறக்கினாலும் அதையும் பீட் செய்து ஒவ்வொரு முறையும் தன்னுடைய வெற்றியை தக்க வைத்து வருகிறது பிக்பாஸ்.பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு இப்படிப்பட்ட வரவேற்பு கிடைக்க முக்கிய காரணம் உலகநாயகன் கமல்ஹாசன் என்றும் கூறலாம்.


 மக்கள் பிரதிநிதியாக மேடையில் நின்று, மக்கள் போட்டியாளர்களிடம் கேட்க நினைக்கும் கேள்விகளை நாசுக்காக கேட்பது மட்டுமின்றி....  வார்த்தைகளாலேயே வெளுத்து வாங்குவார்.  அதே போல் போட்டியாளர்கள் செய்யும் நற்செயல்களையும், எப்போதும் பாராட்ட மறந்ததில்லை.

பிக்பாஸ் வீட்டிற்குள் இருக்கும் பிரபலங்கள் 100 நாட்கள் எவ்விதமான வெளியுலக தொடர்பும் இல்லாமல் குடும்பத்தினரை பார்க்காமல் இருக்க வேண்டும், அதுமட்டுமின்றி பிக்பாஸ் கொடுக்கும் டாஸ்குகளையும்  நேர்த்தியாக செய்து, மக்கள் மனதிலும், போட்டியாளர்கள் மனதிலும் இடம் பிடிக்க வேண்டும். 

இப்படி கடைசி வரை தாக்குப் பிடிப்பவர்கள் பிக்பாஸ் பின்னாலே வரை சென்றாலும் டைட்டில் வின்னர் யார் என்பதை தேர்தெடுப்பது மக்கள் தான்.அந்த வகையில் இந்த நிகழ்ச்சியின் 7வது சீசன் ஆரம்பிக்கப்படவுள்ளது. இதில் கலந்துகொள்ளவுள்ள போட்டியாளர்கள் குறித்தும் அடிக்கடி வெளியாகிக் கொண்டிருக்கின்றது.


இப்படியான நிலையில் அக்டோபர் மாதம் 1ம் தேதி ஆரம்பமாகவுள்ள இந்த நிகழ்ச்சியானது திங்கள் முதல் வெள்ளி  வரை இரவு 9.30-10.30 மணி வரையும் சனி மற்றும் ஞாயிறு தினங்களில் இரவு 9.30- 11 மணி வரை ஒளிபரப்பப்படவுள்ளது என அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement