• Jul 26 2025

அந்த நடிகைக்கு தான் கண் குறைபாடு- ஹிந்தி நடிகைக்கு பதிலடி கொடுத்த காஜல் அகர்வால்

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் பரத் நடிப்பில் வெளியான பழனி திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகியவர் தான் காஜல் அகர்வால்.இப்படத்னைத் தொடர்ந்து தெலுங்கு சினிமாவில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததால் அங்கு நடிக்க ஆரம்பித்தார்.அதன் படி ராம் சரணுடன் இணைந்து மகதீரா என்னும் திரைப்படத்தில் நடித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து தமிழில் விஜய்,அஜித், சூர்யா, தனுஷ் என பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் தனக்கென தனி இடத்தை பிடித்தார்.சில ஆண்டுகளுக்கு முதல் திருமண பந்தத்தில் இணைந்த இவருக்கு அண்மையில் ஒரு ஆண் குழந்தையும் பிறந்தது.இருந்தும் பிஸியாக நடித்தும் வருகின்றார்.


சங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்துள்ளார். லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு அனிருத் இசை அமைக்கிறார். இதில் ரகுல் ப்ரீத் சிங், காஜல் அகர்வால், பாபி சிம்ஹா, சித்தார்த், பிரியா பவானி சங்கர் உட்பட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் படப்பிடிப்பு பெரும்பாலும் முடிவடைந்துவிட்டதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்த காஜல் அகர்வாலிடம் பாலிவுட் நடிகை ஹீனா கான் தமிழ் சினிமாவில் நடிகைகள் அனைவரும் குண்டாக இருக்கிறார்கள் என்று கிண்டலாக பேசியது குறித்து செய்தியாளர் கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த நடிகை காஜல் அகர்வால் இந்த காலத்திலும் உடலமைப்பை வைத்து ஒருவரை பற்றி கருத்து சொல்லும் அளவுக்கு சிலர் அறிவு இல்லாதவர்களாக இருக்கிறார்கள். 


 இது அவர்களுடைய பார்வையின் குறைபாடுதானே தவிர, தென்னிந்திய நடிகைகளின் குறைபாடு இல்லை. ஒவ்வொரு ஊர் மக்களுக்கும் ஒவ்வொரு விதமான ரசனை இருக்கும். அந்த வகையில் தென்னிந்திய சினிமா ரசிகர்களுக்கு நடிகைகள் எப்படி இருந்தால் பிடிக்குமோ அப்படி தான் இருக்க முடியும். தவிர குறிப்பிட்ட தனிப்பட்ட நடிகைகளின் எதிர்பார்ப்புக்கு இணங்க தமிழ் நடிகைகள் இருக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது என இந்தி நடிகைக்கு சரியான பதில் அடி கொடுத்துள்ளார்.


Advertisement

Advertisement