• Jul 24 2025

காக்க காக்க படத்திற்கு முதலில் வைக்கப்பட்ட பெயர் என்ன தெரியுமா?– டெஸ்ட் ஷூட் போஸ்டர்கள் இதோ.

Jo / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து கொண்டு இருக்கிறார் நடிகர் சூர்யா. 

அந்த வகையில் சூர்யாவின் திரை பயணத்தில் மைல்கல்லாக அமைந்த படம் காக்க காக்க. இந்த படம் இயக்குநர் கௌதம் மேனன் இயக்கத்தில் 2003 ஆம் ஆண்டு வெளிவந்தது. இந்த படத்தில் சூர்யா, ஜோதிகா, ஜீவன், ரம்யா கிருஷ்ணன், டேனியல் பாலாஜி உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள்.இந்த படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. 

இந்த படத்தில் சூர்யா அவர்கள் போலீஸ் கதாபாத்திரத்தில் வேற லெவல் தூள் கிளப்பி இருப்பார். இந்த படத்திற்கு முதலில் “பின்குறிப்பு” என்று தலைப்பு வைத்தர்கள்.

பின்குறிப்பு தலைப்புடன் போஸ்டரும் சோசியல் மீடியாவில் வெளிவந்தது. பின் சில காரணங்களால் அந்த படத்தின் தலைப்பு காக்க காக்க என்று மாற்றப்பட்டது.இப்படி ஒரு நிலையில் காக்க காக்க படத்தின் சில சுவாரசியமான தகவல்களை கூறியுள்ளார் இயக்குநர் கௌதம் மேனன். அதில் பேசிய கௌதம் மேனன், 'நான் முதலில் இந்த கதையில் ஜோதிகாவிற்காக எழுதிவிட்டு இந்த கதைக்கு நடிகராக  அஜித் மற்றும் விக்ரம் யாரையாவது  நடிக்க வைக்கலாம் என்று இருந்தேன்.

ஆனால், சில பல காரணங்களால் அவர்களால் இந்த படத்தில் நடிக்க முடியவில்லை.  அதன்பின்னர்தான் சூர்யா இந்த படத்தில் நடிக்க வந்தார் என்று கூறிய கௌதம் மேனன் இந்த படத்திற்கு சூர்யா எடுத்த ரிஸ்க் ஒன்றைப் பற்றியும் கூறி இருக்கிறார்.

இந்த படத்தின் ஒரு காட்சியில் சூர்யாவின் கண்கள் சிவப்பாக தெரிய வேண்டும் என்பதற்காக அவர் இரண்டு நாட்கள் சாப்பிடாமல் இருந்தார். மேலும் அடிக்கடி தலைகீழாக நின்று தனது கண்கள் ரத்த நிறத்தில் இருப்பதற்காக ரிஸ்க் எடுத்தார். ஒருமுறை 6:00 மணிக்கு படப்பிடிப்பிற்காக நாங்கள் அனைவரும் தயாராக இருந்தபோது திடீரென்று சூர்யா மயங்கி விழுந்து விட்டார். நாங்கள் உடனே ஓடிச்சென்று அவரை தூக்கினோம்.அந்த நாள் சூட்டிங்கை கூட கேன்சல் செய்து விட்டோம் என்று கூறியுள்ளார் கௌதம் மேனன்.


Advertisement

Advertisement