• Jul 25 2025

சந்தானத்துக்கு சிம்பு படத்தில் வாய்ப்பு கிடைத்தது இப்படித்தானா? சுவாரஸிய சம்பவத்தை பகிர்ந்துகொண்ட நண்பர்!

Jo / 2 years ago

Advertisement

Listen News!

டைமிங் ரைமிங் காமெடிகளால் தமிழ் சினிமாவில் சிரிப்பின் நம்பிக்கை நட்சத்திரமாய் உயர்ந்தவர் சந்தானம். தமிழில் காமெடியில் கலக்கி வந்த சந்தானம் கடந்த சில ஆண்டுகளாக ஹீரோவாக நடித்து வருகிறார்.

அந்தவகையில் நடிகர் சந்தானம் குறித்து காதல் குமார் சேனல் ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ளார்.சந்தானத்திற்கு சிம்பு வாய்ப்பு தர என்ன காரணம் என்ற கேள்விக்கு ,அவர் பதில் கூறியதாவது,

''சந்தானம் எனக்கு நண்பனாக பல வருடங்களாக பழக்கம் இருந்தது.'காதல் அழிவதில்லை’,படத்தில் முதன் முதலாக நடித்திருந்தார்.அதில்  டையலொக் பெருசா குடுக்கேல  அதுக்கு பிறகு விஜய் டிவியில் ஒரு ஷோ பண்ணிட்டு இருந்தாரு. சிம்பு அவருடைய பயங்கர fan .சந்தானம் ஒரு நாள் எனக்கு கால் பண்ணி என்கிட்ட வந்து சொன்னாரு எனக்கு கலியாணம்டா மச்சான் ,சிம்பு சாருக்கு பத்திரிக்கை கொடுக்கோணும் எண்டாரு.அப்போ சிம்பு சாரிண்ட மன்மதன் படம் எடுத்திக்கிட்டு இருந்தும். சிம்பு சாரிட்ட என்ர கலியாணம் கண்டிப்பா வரோணும்னு சொல்லிட்டு போய்ட்டாரு.கலியாணம் அண்டு சிம்பு சார் சிங்கப்பூர் போயிட்டாரு இங்கே இல்லை .சந்தானம் சிம்பு சார் வாராரு எண்டு கட்டவுட் எல்லாம் அடிச்சு சிறப்பா செஞ்சிருந்தாரு.

நான் சிம்பு சாருக்கு கால் பண்ணி இன்னைக்கு கல்யாணம் எல்லாரும் வந்துட்டாங்க வெடி எல்லாம் வாங்கி வச்சு வெயிட் பண்றாங்க எண்டு சொன்னன் .அதுக்கு அவர் சாரி மச்சான் நான் இப்ப வெளிநாட்டில் நிக்கிறன் என்ன பண்றது எண்டு கேட்டாரு.அவர் பெரிய ஆளு இவற்றை கல்யாணத்துக்கு எல்லாம் அவர் வர போகிறாரா என்றெல்லாம் பேசினாங்க .சந்தானம்  ரொம்ப வருத்தப்பட்டாரு.ஒரு ரெண்டு மூன்று நாளுக்கு அப்புறம் சிம்பு வந்து எனக்கு கால் பண்ணி சந்தானத்தை உடனே பாக்கணும் எண்டாரு .நான் சாயந்தரம் கூட்டிட்டு போனேன் ,அங்கிருந்து எழும்பி வந்து அவரை கட்டிப்பிடித்து சாரி ரொம்ப மன்னிச்சுடு திடீரெண்டு போக வேண்டி வந்துச்சு, உனக்கு ஏதாச்சும் பண்ணனும் எண்டு சொல்லி மன்மதன் படத்துல அந்த கேரக்டர  கொடுத்தாரு.அது பெரியளவில ரீச் ஆயிட்டு.தான் செய்த தவறுக்கு சந்தானத்திற்கு இந்த படத்தின் மூலம் பெரிய கிப்ட் கொடுத்தாரு'' என்று கூறினார்.

Advertisement

Advertisement