• Jul 25 2025

பொன்னியின் செல்வன் 2 படத்தில் ஆதித்ய கரிகாலனுக்கு என்ன ஆகும் தெரியுமா?- சூப்பரான க்ளூ கொடுத்த விக்ரம்

stella / 2 years ago

Advertisement

Listen News!


லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரித்துள்ள பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகமான “பொன்னியின் செல்வன் -1”  கடந்த 2022 செப்டம்பர் 30 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இந்த படம் உலகம் முழுவதும் 500+ கோடி ரூபாயை வசூலித்து சாதனை படைத்தது. 

இதன் தொடர்ச்சியாக லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரித்துள்ள பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகம்  PS-2 திரைப்படம் 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 28 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என  அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 


பாண்டிய ஆபத்துதவிகளை தூண்டிவிட்டு, ஆதித்த கரிகாலன் மீதான தன் பழைய வஞ்சத்தை தீர்த்துகொள்ள நந்தினி செய்யும் சூழ்ச்சியும் அதனால் சோழ அரியணைக்கு வரும் ஆபத்தும், இதை எதிர்கொள்ள, தான் விரும்பும் வந்தியத்தேவன் மூலம் இலங்கையில் உள்ள தன் சகோதரனும் பொன்னியின் செல்வனுமான அருள்மொழிவர்மனுக்கு செய்தி அனுப்புகிறார் சோழ இளவரசி குந்தவை. 


நந்தினியின் சூழ்ச்சி எப்படி சோழர்களால் முறியடிக்கப்படுகிறது? நந்தினி திருந்தினாரா? ஆதித்த கரிகாலன் என்ன ஆகிறார்? ஆதித்த கரிகாலனுக்கும் நந்தினிக்குமான பிரச்சனைக்கு பின்னணி தெளிவானதா? என்பதை நோக்கி இப்படத்தின் 2-ஆம் பாக கதை பயணிக்கிறது.

இந்நிலையில் பொன்னியின் செல்வன் திரைப்படக் குழுவினர் சென்னையில் பத்திரிகையாளர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். அப்போது பொன்னியின் செல்வன் படத்தில் வரும் ஆதித்த கரிகாலன் கதாபாத்திரம் 2-வது பாகத்தில் என்ன ஆகும்? என இயக்குநர் மணிரத்னத்திடம் கேட்கப்பட்டது, 


அவரோ, விக்ரமிடம் க்ளூ கொடுக்க சொல்ல, விக்ரமோ, “ஆதித்த கரிகாலனுக்கு ஒன்னும் ஆகாது; நீங்கள் படத்தில் பாருங்கள் அதில் சர்ப்ரைஸ் இருக்கிறது.” என்றார். மேலும், பொன்னியின் செல்வன் 3-வது பாகத்தில் ஆதித்த கரிகாலன் தான் ஹீரோ (உண்மை அல்ல, வேடிக்கையாக) என்றும் அருள்மொழி வர்மன் அப்போது சின்ன குழந்தை என்றும் விக்ரம் கலகலப்பாக கூறினார்.


Advertisement

Advertisement