• Jul 25 2025

இவர்களால் தான் திரிஷா திருமணம் செய்து கொள்ளவில்லை... மீண்டும் கொளுத்திப் போட்ட முக்கிய பிரபலம்..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

திரிஷா தற்போது விஜய்யுடன் சேர்ந்து லியோ படத்தில் நடித்து வருகின்றார். இவர் திரையுலக வாழ்க்கையை தாண்டி நிஜ வாழ்க்கையில் சில நடிகர்களுடன் கிசுகிசிக்கப்பட்டுள்ளார். இருப்பினும் 40வயதைக் கடந்து விட்ட நிலையிலும் இன்றுவரை திருமணம் செய்யாமலே இருந்து வருகின்றார்.


திரிஷா நடிப்பில் பிசியாக இருந்தாலும் அவர் திருமணம் செய்துகொள்ளாதது ஏன் என்பது தான் சமீபகாலமாக அவரிடம் முன்வைக்கப்படும் கேள்வியாக உள்ளது. திரிஷாவும் இதுகுறித்து ஓப்பனாக எந்தவித பதிலையும் இதுவரை அளித்ததில்லை. 


இந்நிலையில், சினிமா நடிகைகள் மற்றும் சீரியல் நடிகைகள் பற்றிய அந்தரங்க விஷயங்களைப் பற்றி யூடியூப்பில் பேசி சர்ச்சைக்குரிய பத்திரிகையாளராகவும் நடிகராகவும் வலம் வரும் பயில்வான் ரங்கநாதன், திரிஷா திருமணம் செய்ய மறுப்பது ஏன் என்பது குறித்து புது தகவல் ஒன்றை மீண்டும் வெளியிட்டுள்ளார்.


அதாவது திரிஷா திருமணம் செய்யாமல் இதுவரை காலமும் முரட்டு சிங்கிளாக வலம் வருவதற்கு நடிகர்கள் சிம்புவும், ராணாவும் தான் காரணம் என பயில்வான் கூறி உள்ளார். அந்தவகையில் அவர்கள் இருவரும் திரிஷாவை காதலித்து ஏமாற்றிவிட்டதால் தான் திரிஷாவுக்கு திருமணத்தின் மீதான நம்பிக்கையே போய்விட்டதாகவும், அதன்காரணமாகவே அவர் 40 வயதை நெருங்கிய நிலையிலும் முரட்டு சிங்கிளாக இருந்து வருவதாக பயில்வான் கொளுத்திப் போட்டுள்ளார்.

Advertisement

Advertisement