• Jul 25 2025

ஓடிடியில் வெளியாகும் 'ஸ்வீட் காரம் காபி' வெப் சீரிஸ்... எப்போ தெரியுமா... வெளியானது அறிவிப்பு..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் ஒரிஜினல் தொடர் ஆகிய 'ஸ்வீட் காரம் காபி' ஆனது வரும் ஜூலை 6ஆம் அன்று அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாகின்றது. எட்டு எபிசோட்கள் கொண்ட இந்தத் தொடர், மூன்று பெண்களின் மறக்க முடியாத பயணத்தை அழகாக தொகுத்துக் காட்டுகின்றது.

அதாவது வெவ்வேறு தலைமுறையைச் சேர்ந்த பெண்கள், வாழ்க்கையின் மீதான தங்கள் அனஂபு, மேலும் தன்னம்பிக்கை மற்றும் சுய-கண்டுபிடிப்பின் இனிமையான மற்றும் நிறைவான விஷயங்கள் பலவற்றைக் கண்டறிகின்றனர். 


அந்தவகையில் ரேஷ்மா கட்டாலாவின் உருவாக்கம் மற்றும் லயன் டூத் ஸ்டுடியோஸ் பிரைவேட் லிமிடெட் தயாரிதுள்ள இந்தத் தொடரை பிஜாய் நம்பியார், கிருஷ்ணா மாரிமுத்து மற்றும் சுவாதி ரகுராமன் இயக்கியுள்ளனர். அத்தோடு இதில் லட்சுமி, மது, சாந்தி ஆகியோர் நடித்துள்ளனர்.


ஆகவே உலகெங்கிலும் உள்ள 240 க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் உள்ள பிரைம் உறுப்பினர்கள், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் டப்களுடன் தமிழில் ஜூலை 6 முதல் இந்த தொடரை ஸ்ட்ரீம் செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement