• Jul 24 2025

இதெல்லாம் உங்க அப்பாகிட்ட மட்டும் வச்சுக்கோங்க... விஜய்யை கடுமையாகத் திட்டித் தீர்த்த தேவயானியின் கணவர்...!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

கடந்த ஜனவரி மாதம் நடிகர் விஜய் நடிப்பில் வம்சி இயக்கத்தில் வாரிசு திரைப்படம் வெளியாகி இருந்தது. இதில் சரத்குமார், ஷாம், ராஷ்மிகா மந்தனா, யோகி பாபு, பிரகாஷ் ராஜ் எனப் பலரும் இணைந்து நடித்திருந்தனர். மேலும் இப்படமானது கலவையான விமர்சனங்களையே பெற்றிருந்தது.

இந்நிலையில் பிரபல இயக்குநரும் தேவயானியின் கணவருமான ராஜகுமாரன் விஜய் பற்றியும் அவரின் 'வாரிசு' திரைப்படம் குறித்தும் பேட்டி ஒன்றில் கடுமையாக விமர்சித்திருக்கிறார். அந்தவகையில் அவர் கூறுகையில் "வாரிசு படத்தில் கூட விஜய் ஒழுங்கா நடிக்கவே இல்லை. சும்மா தப்பு தப்பா நடிச்சு இருக்கிறார் வாரிசு திரைப்படத்தில் சரத்குமார் மட்டும் தான் ஒழுங்காக நடித்திருக்கிறார்" என்றார்.


அதுமட்டுமல்லாது "ஒரு தந்தையிடம் மகன் இப்படியா ஆணவத்தோடு நடத்துக் கொள்ளவது நிஜத்தில் அவர் எப்படி இருக்கிறாரோ அதை திரையில் காட்டக் கூடாது அதையெல்லாம் வேறு எங்காவது காட்டிக் கொள்ள வேண்டும். இதைப் பார்த்து மற்றவர்களும் இப்படித் தான் நடந்துக் கொள்வார்கள். அதற்கு நாங்களே ஒரு முன் உதாரணமாக இருக்க கூடாது" எனவும் கூறியுள்ளார்.

அத்தோடு "நான் சரத்குமார் வைத்து சூரிய வம்சம் திரைப்படத்தை எடுத்தேன். அந்த திரைப்படத்தில் சரத்குமார் சொல்வார், நான் சொத்தாக நினைக்கிற தெய்வமே வீட்டுக்குள்ள தான் இருக்குன்னு அதுதான் ஒரு சிறந்த உதாரணம்" என விஜய்யை அப்படத்துடன் ஒப்பிட்டு கூறியுள்ளார்.


மேலும் "விஜய், அஜித், விக்ரம், கமல், ரஜினி இவர்கள் யாரும் நல்ல நடிகர்கள் கிடையாது இவர்களுக்கு மேல் சரத்குமார் தான் இருக்கிறார்" எனவும் தெரிவித்துள்ளார். இவரின் சமூக வலைத்தளங்களில் தற்போது பேசு பொருளாக மாறி இருக்கின்றது.

Advertisement

Advertisement