• Jul 25 2025

த்ரிஷா உடம்பில் எங்கெங்கு என்ன என்ன டாட்டூ இருக்கு தெரியுமா? தீயாய் பரவும் புகைப்படங்கள்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

நடிகை த்ரிஷா பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவையாக நடித்த நிலையில், அடுத்தடுத்து முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்புகள் குவிந்து வருகின்றன.அத்தோடு  லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் லியோ படத்தில் கதாநாயகியாக  நடித்து வருகிறார் த்ரிஷா.

அதே நேரம் பொன்னியின் செல்வன் 2 படத்தின் ப்ரோமோஷனுக்காக இந்த மாதம் முழுதாகவே லியோ படத்தின் படப்பிடிப்புக்கு லீவு விட்டு விட்டு பொன்னியின் செல்வன் படக்குழுவுடன் ப்ரோமோஷன் மீட்டிங்கில் சுற்றி வருகிறார் த்ரிஷா.

 நடிகை த்ரிஷா குருவி பட காலத்தில் இருந்தே டாட்டூ மீது அதிக பிரியம் கொண்ட நடிகையாக தமிழ் சினிமாவில் வலம் வருகிறார். அத்தோடு குருவி படத்துக்கு முன்பாக அவர் தனது மார்புக்கு மேல் போட்ட அந்த நெமோ மீன் டாட்டூ அந்த படத்தில் ஏகப்பட்ட இடங்களில் காட்சிப்படுத்தப்பட்டு ரசிகர்களுக்கு கவர்ச்சி ட்ரீட் கொடுத்திருக்கும்.


அந்த மீன் டாட்டூவுக்கு கிடைத்த யோகத்தை பார்த்தீங்களா? எங்கே போய் உட்கார்ந்து இருக்கு என அப்போதே ஏகப்பட்ட இளைஞர்கள் ஏங்கித் தவித்தனர். மேலும் அந்த ஒரு டாட்டூ மட்டுமின்றி நடிகை த்ரிஷாவின் உடம்பில் பல இடங்களில் அடிக்கடி டாட்டூக்களை குத்திக் கொள்வதை வாடிக்கையாக கொண்டிருக்கிறார்.மேலும் அந்த டாட்டூவை போட்ட ராசி அடுத்தடுத்து ஏகப்பட்ட பட வாய்ப்புகள் நடிகை த்ரிஷாவுக்கு கிடைத்ததாக அப்போது ரசிகர்களே நம்பினர்.

நடிகை த்ரிஷா ஒரு டாட்டூ பிரியை என்பதை புரிந்துக் கொண்ட பூலோகம் படத்தின் இயக்குநர் கல்யாண கிருஷ்ணன் த்ரிஷாவின் தொடையில் ஜெயம் ரவியின் டாட்டூவை போடுவது போன்ற காட்சிகளை வைத்திருப்பார்.

ஆனால், அது வெறும் படத்துக்கு போடப்பட்ட டெம்பரவரி டாட்டூ என்பது குறிப்பிடத்தக்க விடயம்.ஆனால், அந்த புகைப்படங்கள்  வெளியான சமயத்தில் த்ரிஷா டாட்டூ போடும் அந்த புகைப்படங்கள்  வேறலெவலில் டிரெண்டாகின.

 சில ஆண்டுகளுக்கு முன்பாகவே நடிகை த்ரிஷா தனது முதுகில் கேமரா ஒன்று இருப்பது போன்ற டாட்டூவை போட்டிருந்தார். சினிமா மீது உள்ள காதல் காரணமாக அந்த டாட்டூவை த்ரிஷா குத்தியிருந்தார்.


இவ்வாறுஇருக்கையில், தற்போது பொன்னியின் செல்வன் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளுக்கு ஸ்லீவ்லெஸ் உடையில் கலந்து கொண்ட த்ரிஷாவின் அந்த பழைய டாட்டூ பளிச்சென தெரிய நெட்டிசன்கள் த்ரிஷாவின் புதிய டாட்டூ இது என டிரெண்ட் செய்து வருகின்றனர்.

Advertisement

Advertisement