• Jul 24 2025

ராம்சரணை அடிக்க ஆயிரம் பேரை களமிறக்கிய ஷங்கர்... வெளியான தகவலால் ஷாக்கான ரசிகர்கள்..!

Jo / 2 years ago

Advertisement

Listen News!

பிரம்மாண்ட இயக்குநர் என பெயரெடுத்தவர் ஷங்கர். அவர் இயக்கத்தில் தற்போது இரண்டு பிரம்மாண்ட திரைப்படங்கள் தயாராகி வருகின்றன. ஒன்று கமல்ஹாசனின் இந்தியன் 2, மற்றொன்று ராம்சரண் நாயகனாக நடிக்கும் கேம் சேஞ்சர். இந்த இரண்டு படங்களையும் ஒரே நேரத்தில் இயக்கி வருகிறார் 

சமீபத்தில் தான் இந்தியன் 2 படப்பிடிப்பிற்காக தைவான் மற்றும் தென் ஆப்பிரிக்கா சென்றிருந்தார் ஷங்கர். அங்கு கமல்ஹாசன் நடிக்கும் ரெயில் சண்டைக்காட்சியை படமாக்கினர். அதற்கான ஷூட்டிங் கடந்த சில தினங்களுக்கு முன்னர் தான் முடிவடைந்தது.

இதனைத் தொடர்ந்து  நேரடியாக கேம் சேஞ்சர் படத்தின் கிளைமாக்ஸ் ஷூட்டிங்கில் இணைந்துவிட்டார் ஷங்கர். அப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சி குறித்த தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.

வழக்கமாக தன் படங்களில் பாடலாக இருந்தாலும், பைட்டாக இருந்தாலும் பிரம்மாண்டமாக படமாக்க நினைக்கும் இயக்குநர் ஷங்கர், கேம் சேஞ்சர் பட கிளைமேக்ஸில் நடிகர் ராம்சரண் ஆயிரம் ஸ்டண்ட் மேன்களுடன் சண்டையிடும்படியான காட்சியை படமாக்க திட்டமிட்டுள்ளாராம். இந்த சண்டைக் காட்சியை அன்பறிவு மாஸ்டர்கள் தான் வடிவமைத்து உள்ளார்களாம். இதற்கான ஷூட்டிங் வருகிற ஏப்ரல் 24-ந் தேதி ஷம்ஷாபாத்தில் நடைபெற உள்ளதாம்.

இந்த சண்டைக்காட்சிக்காக பிரம்மாண்ட அரங்குகள் அமைக்கும் பணி தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இந்த கிளைமேக்ஸ் ஷூட்டிங்கில் நடிகர்கள் எஸ்.ஜே.சூர்யா, ஜெயராம் உள்ளிட்ட நடிகர்களும் பங்கேற்க உள்ளார்களாம். இந்த கிளைமாக்ஸ் காட்சியை மே 5-ந் தேதி வரை படமாக்க திட்டமிட்டுள்ளாராம் ஷங்கர். கேம் சேஞ்சர் திரைப்படம் வருகிற 2024-ம் ஆண்டு பொங்கலுக்கு திரைக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement