• Jul 24 2025

விஜய் டெலிவிஷன் விழாவில் பெஸ்ட் கப்பில்ஸ் என்ற விருதினை பெற்ற சீரியல் ஜோடிகள் யார் தெரியுமா?- வெளியாகிய சூப்பர் அப்டேட்

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவி ரசிகர்களுக்கென்று தனி ரசிகர் பட்டாளமே காணப்படுகின்றது. அந்த வகையில் விஜய் டிவியில் புதுப்புது சீரியல்கள் ஆரம்பித்து ஒளிபரப்பாகி வருகின்றது.அத்தோடு டிஆர்பியிலும் இவையே முன்னணியில் நிற்கின்றன.


அதிலும் தற்பொழுது புதிதாக ஆஹா கல்யாணம், பொன்னி என இரு புத்தம் புதிய சீரியல்கள் ஆரம்பித்துள்ளன. விஜய் டிவி சீரியல்களில் நடித்து வருபவர்கள்  அதிக அளவு ரசிகர்களை பெற்று வருகிறார்கள். அவர்களது இன்ஸ்டா கணக்குகளில் லட்சக்கணக்கில் குவியும் லைக்குகள் அதற்கு சாட்சி.

சீரியல்களில் சிறப்பாக இருப்பவர்களை தேர்வு செய்து விஜய் டிவி விருதுகள் கடந்த பல வருடங்களாக வழங்கப்பட்டு வருவது எல்லோருக்கும் தெரிந்தது தான்.தற்போது விஜய் டிவியின் 8ம் வருட விருது வழங்கும் விழா இன்றைய தினம் நடைபெற்று வருகின்றது.


இதில் பெஸ்ட் ஜோடி என்னும் விருதினை ஈரமான ரோஜாவே சீசன் 2 சீரியல் ப்ரியா மற்றும் ஜீவா, காவியா- பார்த்தி மற்றும் தென்றல் வந்து என்னைத் தொடும் வெற்றி-அபி ஆகியோர் பெற்றுள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது. இதனால் ரசிகர்கள் தமது வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement