• Jul 25 2025

ஓ அழகிய பூவே - அருள்மொழி வர்மணின் 'வீரா ராஜா வீரா' பாடல் ரிலீஸ்- செம குஷியில் ரசிகர்கள்

stella / 2 years ago

Advertisement

Listen News!

பொன்னியின் செல்வன் என்கிற பெயரை கேட்டதுமே, முதலில் நினைவுக்கு வருவது... தென்னகத்தை ஆண்ட மன்னன் ராஜா ராஜ சோழன், அருண்மொழி வர்மன் தான். கல்கி தன்னுடைய பொன்னியின் செல்வன் நாவலை கூட , அவரின் ஆச்சி, புத்தி கூர்மை, போர் போன்றவற்றை அடிப்படியாக வைத்து தான் எழுதி இருந்தார். இதில் சில கதாபாத்திரங்கள் புனையப்பட்ட எழுதப்பட்டிருந்தாலும், பல கதாபாத்திரங்கள் உண்மையாகவே நம் வரலாற்று பக்கங்களில் இடம்பிடித்தவர்கள் ஆவர்.

இந்நிலையில், ராஜ ராஜ சோழனின்... காதல் மற்றும் பொன்னனான ஆச்சி குறித்தும் விளக்கும் விதமாகவே 'வீரா ராஜா வீரா' பாடல் வெளியாகியுள்ளது. முதல் பாகத்தில், பொன்னியின் செல்வனாக நடித்துள்ள ஜெயம் ரவியின் காட்சிகள் மிகவும் குறைவாக உள்ளதே என நினைத்தவர்களுக்கு, இரண்டாம் பாகத்தில், அவரை பற்றிய காட்சிகள் அதிகம் இருக்கும் என்பது இப்பாடலின் மூலமாகவே தெரிகிறது. 

ஏற்கனவே பொன்னியி செல்வன் 2 பாகத்தில் இருந்து வெளியான அக நக பாடல் வேறு லெவலுக்கு ஹிட்டடித்த நிலையில்... இரண்டாவது பாடலிலும் ரசிகர்களை தன்னுடைய இசையால் கட்டிபோட்டுள்ளார் ஏ.ஆர்.ரகுமான். அதேபோல்... இளங்கோ கிருஷ்ணாவின் பாடல் வரிகள் வேற லெவலுக்கு உள்ளது. ஷங்கர் மஹாதேவன், மற்றும் கே எஸ் சித்ரா, ஹரிணி குரல் பாடலுக்கு மிகப்பெரிய பலம் எனலாம்.


Advertisement

Advertisement