• Jul 23 2025

தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் டாப் 5 நடிகர்கள் யார் யார் தெரியுமா?- அடடே இது தான் முதன் முறையா?

stella / 2 years ago

Advertisement

Listen News!

சமீபகாலமாக தமிழ் சினிமா ரசிகர்களிடையே நல்ல தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றது.அதற்கு காரணம் தற்போதைய சூழ்நிலைக்கு ஏற்றது போல முன்னணி நடிகர்கள் கதைகளைத் தேர்வு செய்து நடித்து வருகின்றனர் என்பதும் முக்கியமாகும். மேலும் அப்படங்கள் வெற்றி பெறும் பொருட்டு தமது சம்பளங்களையும் அதிகரித்து வருகின்றனர்.

அந்த வகையில் தற்பொழுது அதிக சம்பளம் வாங்கும் நடிகர்கள் பற்றி வெளியாகியுள்ளது.அதன்படி  ஐந்தாவதாக அதிக சம்பளம் வாங்கும் பட்டியலில் இருப்பது நடிகர் தனுஷ். திருச்சிற்றம்பலம் திரைப்படம் 100 கோடி வசூலை தாண்டியதை அடுத்து நடிகர் தனுஷின் சம்பள உயர்வு கிடுகிடுவென உயர்ந்துள்ளது. இவரின் சம்பளம் 50 கோடி ஆகும்.


இந்த நிலையில் நான்காவது இடத்தில் அதிக சம்பளம் வாங்கும் இடத்தில் தமிழ் சினிமாவில் மூத்த நடிகர் ஆன கமல்ஹாசன் இடம் பெற்றிருக்கிறார் . இவர் நடிப்பில் வெளியாகிய விக்ரம் திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்ததால் இவர் 60 கோடி சம்பளம் வாங்குகின்றார் என்று கூறப்படுகின்றது. இவருக்கு தமிழ் சினிமாவில் மட்டுமல்லாது அனைத்து மொழி திரைப்படங்களிலும் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் வரத் தொடங்கின.


அடுத்ததாக 3வது இடத்தை நடிகர் ரஜினிகாந்த் பெற்றுள்ளார்.இவர் நடித்த காலா, பேட்ட, அண்ணாத்தே தர்பார் 2.0 போன்ற திரைப்படங்கள் அனைத்தும் பெரிய அளவிற்கு வெற்றிப் படம் இல்லாததால் இவரது மார்க்கெட் சற்று குறைந்துள்ளது இவர் 75 கோடி வரை சம்பளம் வாங்குகிறார்.


மேலும் 2ஆவது இடத்தினை நடிகர் அஜித் பெற்றுள்ளார்.இவர் நடித்த படங்கள் அனைத்தும் மக்களிடையே நல்ல வரவேற்பையும் பெற்றுள்ளது. குறிப்பாக வீரம் விவேகம் வலிமை வேதாளம் போன்ற திரைப்படங்கள் மக்களிடையே அமோக வரவேற்பை பெற்றதன் மூலம்  இவரின் சம்பளம் 80 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.


அடுத்ததாக நாம பார்க்க இருக்க ஹீரோ தமிழ் சினிமாவில் மட்டுமல்லாது இந்திய மொழி சினிமா ரசிகர்களாலும் பெரிதாக கவரப்பட்ட ஒரு தமிழ் நடிகர் விஜய் . இவர் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் தனது நடனத்தின் மூலமும் வசீகரமான நடிப்பாலும்  வெகுவாக கவர்ந்தவர்.


இந்த நிலையில் இவரது லியோ திரைப்படம் இன்னும் கொஞ்ச நாட்களில் வெளியாக உள்ள நிலையில் இவரது ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில் இவர் நூறு கோடி வரை சம்பளம் வாங்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது ஒரு தமிழ் நடிகர் இவ்வளவு சம்பளம் வாங்குவது இதுவே முதல்முறையாகும்.


Advertisement

Advertisement