• Jul 24 2025

செட்டில் அநாகரீகமாக நடந்து கொண்ட கோமாளி- உடனடியாக வெளியேற்றிய டீம்- பதிலாக வரப் போவது யார் தெரியுமா?

stella / 2 years ago

Advertisement

Listen News!


விஜய் தொலைக்காட்சியில் எத்தனையோ ரியாலிட்டி ஷோக்கள் வந்தாலும் ஒரு சில நிகழ்ச்சிகள் தான் மக்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் மூன்று சீசன்களாக ஒளிபரப்பாகி வந்த ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்று இருக்கிறது.

முதல் சீசனுக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து மூன்று சீசனும் ஒளிபரப்பாகி நல்ல வரவேற்பை பெற்று இருந்தது.அதற்கு முக்கிய காரணமே இந்த நிகழ்ச்சியில் வரும் கோமாளிகள் தான்.அதிலும் கொரோனா லாக்டவுனில் மக்களுக்கு இருந்த பிரச்சனையில் மருந்தாக குக் வித் கோமாளி நிகழ்ச்சி இருந்தது என்றே சொல்லலாம். 


இந்த நிலையில் தற்பொழுது இந்த நிகழ்ச்சியின் 4வது சீசன் ஒளிபரப்ப தொடங்கி விட்டனர். இந்நிலையில் கடந்த சீசன் போல இல்லாமல் இந்த சீசன் பல புதிய கோமாளிகள் கலந்து கொண்டிருக்கின்றனர்.ஏனெற்றால் கடந்த குக் வித் கோமாளி சீசன் 3 மிகப்பெரிய அளவில் ஹிட் கொடுத்ததை அடுத்து அதில் இருந்த புகழ், KPY பாலா, சிவாங்கி போன்றவர்கள் புகழ், வாய்ப்பு கிடைத்து திரைப்படங்களில் மிகவும் பிசியாக நடித்து வருவதினால் அவர்களுக்கு பதிலாக ஜி.பி.முத்து, ஓட்டேரி சிவா, சிங்கப்பூர் தீபன், சின்னத்திரை நடிகையான ரவீனா தாகா, சுனிதா, மோனிஷா, மணிமேகலை உள்ளிட்டோர் புதிய கோமாளிகளாக கலந்து கொண்டுள்ளனர்.

இப்படி பட்ட நிலையில் கடந்த வாரம் கோலாகலமாக தொடங்கிய குக் வித் கோமாளி சீசன்4ல் கலந்து கொண்ட போட்டியாளரான ஓட்டேரி சிவா இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. மேலும் இவருக்கு பதிலாக விஜய் டிவியின் கலக்க போவது யாரு நிகழ்ச்சியில் மிகவும் பிரபலமான தங்கதுரை பங்கேற்க உள்ளார் எனவும் தகவல்கள் கிடைத்துள்ளன.


கலக்க போவது யாரு நிகழ்ச்சியில் மொக்க ஜோக் சொல்லி கடுப்படிக்கும் தங்கதுரைக்கு பதிலாக ஓட்டேரி சிவாவிற்கு வாய்ப்பு கொடுத்திருக்கலாம் என்று ரசிகர்கள் மத்தியில் அதிர்ப்தி கிளம்பினாலும் என்று சிவா அதிகமாக நிகழ்ச்சியின் போது குடிப்பதினால் அவரது செயல்பாடுகள் படப்பிடிப்பின் போது சரியாக இல்லை என்றும் கட்டுப்பாடு இல்லாமல் செயல்படும் காரணத்தினால் தான் விஜய் டிவி தொகுப்பாளர்கள் இந்த முடிவை எடுத்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.


Advertisement

Advertisement