• Jul 24 2025

ட்ரோல் செய்தவருக்கு தரமான பதிலடி கொடுத்த ஜாக்குலின்

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பான 'கலக்கப் போவது யாரு' நிகழ்ச்சியின் தொகுப்பாளராக பணியாற்றி மக்கள் மத்தியில் பிரபலமானவர் ஜாக்குலின்.

இதன் பின் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் வெளிவந்த 'கோலமாவு கோகிலா' படத்தில் நயன்தாராவிற்கு தங்கையாக நடித்திருந்தார். எனினும் இதையடுத்து இவர் 'தேன்மொழி' என்ற சீரியலில் நடித்தார். இந்த சீரியல் 2021 இறுதியில் நிறைவு பெற்றது. அதற்கு பின்பு அவர் எந்த சீரியலிலும் நடிக்கவில்லை.

இவ்வாறுஇருக்கையில் ரசிகர் ஒருவர் ஜாக்குலினிடம், "நீங்க ரக்‌ஷன் போல தொகுப்பாளராக இருந்திருக்கலாம். இந்நேரம் தொகுப்பாளினி பிரியங்கா மாதிரி ஆகியிருக்கலாம். ஆனால் நீங்கல் சீரியலில் நடிக்க சென்றுவிட்டீர்கள், அந்த சீரியலும் பிளாப் ஆகிவிட்டது. சினிமாவிலும் இதே நிலைமை தான்.”

”இப்போது தொகுப்பாளராக பணியாற்ற கூட வாய்ப்பு இல்லாமல் இருக்கிறீர்கள். மற்ற பிரபலங்களுக்கு சமூகவலைத்தளத்தில்  பாலோவர்ஸ் அதிகமாகிக் கொண்டிருக்கிறது. ஆனால் உங்களுக்கு மட்டும் பாலோவர்ஸ் குறைந்து வருகிறது" என்று கிண்டலாக பதிவிட்டுள்ளார்.


இதற்கு பதிலடி கொடுத்த ஜாக்குலின், "நான் முடிந்த வரை என்னுடைய பெஸ்ட் கொடுக்க முயற்சி செய்கிறேன். அத்தோடு மற்றவர்களை காயப்படுத்தும் வகையில் நீங்கள் யாரிடமும் பேசாதீர்கள். என்னை மோட்டிவேட் செய்ததற்கு நன்றி" என்று தெரிவித்துள்ளார்.


Advertisement

Advertisement