• Jul 25 2025

பணப்பெட்டியுடன் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய பிரபலம் யார் தெரியுமா?- அதிர்ச்சியில் ரசிகர்கள்

stella / 2 years ago

Advertisement

Listen News!

கடந்த மூன்று மாதங்களாக, விறுவிறுப்பாக சென்று கொண்டிருந்த பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி, தற்போது இறுதி கட்டத்தை எட்ட உள்ளது. இதில் அநேகமாக விக்ரமன், ஷிவின்,  மற்றும் அசீம் ஆகியோர் வெற்றியாளர்களாக இருக்கலாம் என நெட்டிசன்கள் கணித்து கூறி வருகிறார்கள். 

இந்நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, பிக்பாஸ் வீட்டிற்குள் அதிரடியாக பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய போட்டியாளர்கள் மற்றும் சில சிறப்பு விருந்தினர்கள் பிக்பாஸ் வீட்டின் உள்ளே சென்று வந்தனர். இது பார்வையாளர்களையும் குஷிப்படுத்தியது.


மேலும் கடந்த வாரம் ஏடிகே பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறினார். இதனை அடுத்து பணப் பெட்டியுடன் யார் வெளியேறப் போகின்றார் என்ற எதிர்பார்ப்பானது ரசிகர்களிடம் அதிகம் காணப்பட்டது.அதன்படி கதிரவன் பணப்பெட்டியை எடுத்துக் கொண்ட வெளியேறியுள்ளதாக கூறப்படுகின்றது.

இதனால் கதிரவன் ரசிகர்கள் மிகவும் குழப்பத்தில் இருப்பதாகவும் கூறப்படுகின்றது.வெற்றியாளர் யார் என்பதனை அறியவும் ஹவுஸ்மேட்ஸ் மற்றும் ரசிகர்கள் ஆவலாக உள்ளதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement