• Jul 24 2025

பேரன்களுடன் ஒரே மாதிரி வேட்டி சட்டை அணிந்து பொங்கல் கொண்டாடிய ரஜினிகாந்த்- யாரெல்லாம் நிற்கிறாங்க என்று பாருங்க

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர் நடிகர் ரஜினிகாந்த்.உலக அளவில் ரசிகர்களை பெற்றுள்ள இவர் தற்பொழுது  நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். இவருடைய மூத்த மகளான ஐஸ்வர்யா தனது கணவர் தனுஷை விவாகரத்து செய்ததற்கு பிறகு அப்பா அம்மாவுடன் வசித்து வருகிறார். 

ஐஸ்வர்யா மற்றும் தனுஷின் மகன்களான யாத்ராவும் லிங்காவும் அப்பா, அம்மா என மாறி மாறி இருந்து வருகின்றனர். பெரும்பாலும் ஃபெஸ்டிவல்களை அம்மா ஐஸ்வர்யா தாத்தா ரஜினிகாந்துடன் சேர்ந்தே கொண்டாடி வருகின்றனர். ரஜினிகாந்தும் தனது பேரன்களுடன் நேரத்தை செலவழிப்பதையே அதிகம் விரும்பி வருகிறார்.


அவர்களின் போட்டோக்கள் இணையத்தில் அவ்வப்பொது வெளியாகி வைரலாகி வருகிறது. இந்நிலையில் ரஜினிகாந்த் தனது பேரன்கள் யாத்ரா மற்றும் லிங்காவுடன் பொங்கல் பண்டிகையை கொண்டாடியுள்ளார். பேரன்களை போலவே தானும் வேட்டி சட்டையில் பொங்கல் கொண்டாடியுள்ளார். 


நடிகையும் பாஜக நிர்வாகியுமான மதுவந்தி பொங்கலை முன்னிட்டு நடிகர் ரஜினிகாந்தையும் அவரது மனைவியையும் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.அப்போது அவர்களுடன் சேர்ந்து எடுத்த போட்டோவை தனது சமூக வலைதள பக்கத்தில் ஷேர் செய்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 


Advertisement

Advertisement