• Jul 26 2025

'கார்த்திகை தீபம்' சீரியலில் வில்லியாக என்ட்ரி கொடுக்கும் பிரபல நடிகை யார் தெரியுமா?

Jo / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ்நாட்டு ரசிகர்களின் ஃபேவரட்டான சின்னத்திரை சேனல்களில் ஒன்று ஜீ தமிழ். குறிப்பாக ஜீ தமிழ் தொலைக்காட்சியின் மெகாத் தொடர்கள் ஒவ்வொன்றும் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பு பெற்றன. அந்த வகையில் கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் தொடங்கப்பட்ட சீரியல் தான் கார்த்திகை தீபம், செம்பருத்தி சீரியல் மூலம் முன்னணி சீரியல் நடிகராக ரசிகர்கள் மத்தியில் மிகப் பிரபலமடைந்த கார்த்திக் ராஜ் கதாநாயகனாக நடிக்கும் கார்த்திகை தீபம் சீரியலில் நடிகை ஆர்த்திகா கதாநாயகியாக நடிக்கிறார். 

பெங்காலி மொழியில் சூப்பர் ஹிட் சீரியலாக ஒளிபரப்பான கிருஷ்ணகோலி சீரியலின் தமிழ் வெர்ஷனாக இயக்குநர் V.சதாசிவம் இயக்கத்தில் ஒளிபரப்பாகி வரும் இந்த கார்த்திகை தீபம் சீரியலில் பிரபல நடிகை சுபா ரக்ஷா வில்லியாக நடிக்கிறார் என தற்போது அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளிவந்துள்ளன. முன்னதாக கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான அம்மன் மெகா தொடரில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து அசத்திய நடிகை சுபா ரக்ஷா, தற்போது ஜீ தமிழில் கார்த்திகை தீபம் சீரியலிலும் இணைந்துள்ளார். 

ஏற்கனவே கன்னட சினிமாவில் ஹோம் மினிஸ்டர், ஆப்பிள் கேக், பல்லாரி தர்பார் உள்ளிட்ட திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த நடிகை சுபா ரக்ஷா தற்போது கார்த்திகை தீபம் சீரியலில் வில்லியாக இணைந்து இருப்பது ரசிகர்களுடைய பெரும் கவனத்தை வைத்துள்ளது. 

கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தொடங்கப்பட்ட இந்த கார்த்திகை தீபம் மெகா தொடர் ஆரம்ப முதல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நிலையில் கூடுதலாக தற்போது நடிகை சுபா ரக்ஷா இணைந்திருப்பதால் கார்த்திகை தீபம் சீரியல் அடுத்த கட்டத்திற்கு நகர்ந்து இன்னும் விறுவிறுப்பாக இருக்குமென ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

Advertisement

Advertisement