• Jul 26 2025

விஜய் சேதுபதி ஒரு சாமியாரு, தனுஷ் சேர் கில்லி- எல்லோருடைய காலிலையும் விழனும்- நடிகர் பொன்னம்பலத்தின் சுவாரஸியமான பேட்டி

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் வில்லன் கதாப்பாத்திரங்களிலும் குணச்சித்திர வேடங்களிலும் நடித்து பிரபல்யமானவர் தான் நடிகர் பொன்னம்பலம். இவரை அதிகமாக கபாலி என்று சொன்னால் தான் பெரும்பாலான ரசிகர்களுக்கு தெரியும் எனலாம்.

இவர் அண்மையில் நோய் வாய்ப்பட்டிருந்ததோடு பல நடிகர்களின் உதவியுடன் சிகிச்சை பெற்று தற்பொழுது சுகம் பெற்று நலமுடன் திரும்பியுள்ளார். இதனால் பல்வேறு சேனல்களுக்கும் பேட்டியளிதது வருகின்றார். அந்த வகையில் தந்பொழுது தனக்கு உதவி செய்த நடிகர்கள் குறித்து கூறியுள்ளார். 


அதில் கூறியதாவது சிரஞ்சீவி சேருக்கு என்னை ரொம்ப பிடிக்கும். ஒரு படத்திலை நான் நடிச்சதை பார்த்து மிரண்டிட்டாரு. எனக்கு ஆப்பிரேஷனுக்கு கூட உதவி செய்தாரு. அதே போல தனுஷ் சேர் கில்லி எனலாம். எனக்கு நிறைய விஷயத்தில கெல்ப் பண்ணியிருக்காரு. அதே போல சரத்குமார், கமல் சேர் எல்லாம் உதவி செய்திருக்கிறாங்க.


விஜய் சேதுபதி ஒரு சாமியார் எனலாம். அவருக்கு வாழ்க்கை பற்றி எல்லாமே தெரியும். அவரும் எனக்கு நிறைய உதவி செய்திருக்காரு. அதே போல அர்ஜுன் சேர் என நிறைய பேர் உதவி செய்திருக்காரு. எனக்கு உதவி செய்த எல்லாருக்குமே நன்றி சொல்லனும். தலைவரே உங்களால தான் நான் திரும்ப வந்திருக்கிறேன் என்று சொல்லனும். திரும்ப நடிச்சு உழைக்கணும் என்று ஆசை என்றும் தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement