• Jul 25 2025

குக்வித்கோமாளி சீசன் 4 நிகழ்ச்சியிலிருந்து முதலாவதாக எலிமினேட்டான போட்டியாளர் யார் தெரியுமா?- வெளியாகிய அதிகாரப்பூர்வ தகவல்

stella / 2 years ago

Advertisement

Listen News!


ஒரு சமையல் நிகழ்ச்சியை கூட காமெடியாகவும், கலகலப்பாகவும் நடத்த முடியும் என்பதை நிரூபித்த நிகழ்ச்சி தான் 'குக் வித் கோமாளி'. பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள எப்படி பிரபலங்கள் ஆர்வம் காட்டுகிறார்களோ, அதே போல் பல பிரபலங்கள், குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ள ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

பலருக்கு ட்ரெஸ் பஸ்டாராக இருக்கும் இந்த நிகழ்ச்சியில்  கலந்து கொள்ளும் குக்குகளை விட, கோமாளிகள் மிகவும் பிரபலமாகி விடுகிறார்கள். அந்த வகையில், கடந்த சீசன்களில் கோமாளிகளாக இருந்த புகழ், பாலா, ஷிவாங்கி போன்ற பலர் அடுத்தடுத்து தமிழ் பட வாய்ப்புகளை கைப்பற்றி, தங்களின் காமெடி சென்ஸை வெளிப்படுத்தி வளர்கிறார்கள்.


அந்த வகையில் இந்த நிகழ்ச்சியின் 4வது சீசன் கடந்த இரண்டு வாரங்களுக்கு முதல் தான் ஆரம்பமாகியது. இதில் கடந்த வாரம் முதல் காம்பிடிஷன் ரவுண்ட் ஆரம்பமாகியது. எனவே முதல் வார்த்திலேயே இமியூனிட்டி வின் பண்ணிய பாக்கியலட்சுமி சீரியல் விஷால் இந்த வாரம் எலிமினேஷனில் இருந்து விடுபட்டுள்ளார்.


இப்படியான ஒரு நிலையில் இந்த வாரம் யார் எலிமினேட் ஆகி வெளியேறப் போகின்றார் என்ற எதிர்பார்ப்பானது ரசிகர்களிடையே அதிகமாகக் காணப்பட்டது. அதன்படி குக்வித் கோமாளி சீசன் 4 இலிருந்து முதலாவதாக கிஷோர் எலிமினேட் ஆகி வெளியேறியுள்ளதாக கூறப்படுகின்றது. இதனால் அவரது ரசிகர்கள் கடும் சோகத்தில் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement