• Jul 24 2025

சல்மான்கான் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் சீசன் 16 இன் டைட்டில் வின்னர் யார் தெரியுமா?- அடடே இந்த பிரபலமா?

stella / 2 years ago

Advertisement

Listen News!


21 போட்டியாளர்களுடன் கடந்தாண்டு அக்டோபரில் தொடங்கிய பிக் பாஸ் சீசன் 6, ஜனவரி 22ம் தேதி முடிவுக்கு வந்தது. டைட்டில் வின்னராக அசீம் அறிவிக்கப்பட்டதில் இருந்து விஜய் டிவியின் இந்த முடிவை பலரும் விமர்சித்தனர்.இந்த சீசன் 6, மொத்தம் 106 நாட்கள் வரை நடைபெற்றது.


மேலும் தமிழ் பிக்பாஸினை கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்கி வருகின்றார்.இந்த தமிழ் பிக்பாஸ் கடந்த மாதம் முடிவடைந்தாலும் போட்டியாளர்கள் குறித்த சர்ச்சைகள் அடிக்கடி இணையத்தில் வைரலாகி வருகின்றது.


அதிலும் குறிப்பாக அசீம் விக்ரமனுக்கிடையில் மோதல் நிலவி வருவதோடு கமல்ஹாசனைக் கூட அசீம் விமர்சித்தார் என்றும் அவரிடம் இருந்தும் டைட்டில் வின்னர் பட்டத்தை வாங்குங்கள் என்றெல்லாம் சமூகவலைத்தளங்களில் கருத்துக்கள் பரவி வருகின்றது.


இது ஒரு புறம் இருக்க பிக்பாஸ் நிகழ்ச்சியானது தமிழில் மட்டுமல்லாது தெலுங்கு, ஹிந்தி ,மராத்தி ஆகிய இன்னும் பல மொழிகளில் நடத்தப்பட்டு வருகின்றது.எனவே சல்மான்கான் தொகுத்து வழங்கும் ஹிந்தி பிக்பாஸ் சீசன் 16 இல் எம்.சி ஸ்ரான் என்பவர் டைட்டில் வின்னராக தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.அத்தோடு அவருக்கு பணப்பரிசும் புதிய சொகுசு கார் ஒன்றும் வழங்கி வைக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement