• Jul 25 2025

நீங்க சொன்னது சரி என்றால் ஏன் விஜய் படத்தை வெளியிடக் கூடாது என்று சொன்னார்கள்?- விஜய் ஆண்டனிக்கு பதிலடி கொடுத்த மதுரை முத்து

stella / 2 years ago

Advertisement

Listen News!

இயக்குநர் சசி இயக்கத்தில் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியாகி பிளாக் பஸ்டர் ஹிட்டடித்த படம் 'பிச்சைக்காரன்'. இந்தப்படத்தில் நடித்ததோடு மட்டுமில்லாமல் தயாரித்து இசையமைத்திருந்தார் விஜய் ஆண்டனி. தமிழ் மற்றும் தெலுங்கு இரு மொழிகளிலும் வெளியான இந்தப்படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது.

 இந்நிலையில் இந்தப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகியுள்ளது.நீண்ட காலமாக பேச்சு வார்த்தையில் இருந்த பிச்சைக்காரன் இரண்டாம் பாகத்தை தானே இயக்கி தயாரிக்கவுள்ளதாக அண்மையில் அறிவித்தார் விஜய் ஆண்டனி. இசையமைப்பாளர், நடிகர், தயாரிப்பாளர் என கலக்கி வரும் விஜய் தற்போது இயக்குநர் அவதாரமும் எடுத்துள்ளார். 


பிச்சைக்காரன்' படம் வெளியாகி 6 ஆண்டுகள் கழித்த நிலையில் தற்போது இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது.இந்தப்படத்தின் ஸ்னீக் பீக் ட்ரைலர் கடந்த சில தினங்களுக்கு முன்பாக வெளியானது. இதில் படத்தின் முதல் 3.45 நிமிட வீடியோவை படக்குழு வெளியிட்டது. இந்த வீடியோவில் மூளை மாற்று அறுவை சிகிச்சை குறித்து பேசப்பட்டுள்ளது.


இதன் மூலம் 'பிச்சைக்காரன் 2' படம் மூளை மாற்று மாற்று அறுவை சிகிச்சையை மையமாக வைத்து உருவாகியுள்ளதாக தெரிகிறது.இந்நிலையில் விஜய் ஆண்டனியின் சமீபத்திய டுவிட்டர் பதிவு பல விவாதங்களை கிளப்பியது. அதில், வடக்கனும் கிழக்கனும் தெற்கனும் மேற்கனும் நம்மைப் போல தன் குடும்பத்தைக் காப்பாற்ற தினமும் போராடி வாழும், இன்னொரு சக ஏழை மனிதன் தான். யாதும் ஊரே யாவரும் கேளீர் என ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.


அவரின் இந்த பதிவு குறித்து பலரும் பலவிதமான கருத்துக்கள் கூறி வருகின்றன. இந்நிலையில் விஜய் ஆண்டனியின் கருத்து குறித்து விஜய் டிவி புகழ் மதுரை முத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், பிறகு ஏன் விஜய் படத்தை வெளியிடக் கூடாது என்று சொன்னார்கள்? உழைக்கட்டும். ஆனால் ஆள நினைக்க கூடாது என்று குறிப்பிட்டுள்ளார்.

அவரின் இந்த பதிவுக்கு ஏராளமான கமெண்ட்கள் குவிந்து வருகிறது. 'பிச்சைக்காரன் 2' படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என நான்கு மொழிகளில் உருவாகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement