• Jul 25 2025

மூக்குத்தி அம்மன் படத்தை மிஸ் செய்த டாப் நடிகை யார் தெரியுமா? அவங்க நடிச்சிருந்தா வேற வேவல்ல இருந்திருக்கும்...!!

Jo / 2 years ago

Advertisement

Listen News!

 என். ஜே. சரவணன் மற்றும் ஆர். ஜே. பாலாஜி ஆகியோர் இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் வெளியான திரைப்படம் “மூக்குத்தி அம்மன்”. இந்த திரைப்படம் கடந்த 2020-ஆம் ஆண்டு ஓடிடி தளத்தில் வெளியானது. காமெடியான கதை களத்தில் உருவாகி இருந்த இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

படத்தில் நடிகை நயன்தாரா அம்மன் வேடத்தில் மிகவும் அருமையாக நடித்திருப்பார். படத்தை பார்த்த பலரும் இந்த கதாபாத்திரத்தை நயன்தாராவை விட யாரும் இவ்வளவு அழகா நடந்திருக்க முடியாது என்றே கருத்துக்களை கூறினார்கள் என்றே கூறலாம். 

ஆனால், இந்த திரைப்படத்தில் நயன்தாரா நடித்த கதாபாத்திரத்தில் முதலில் நடிக்கவிருந்தது அவர் இல்லயாம்.

அவருக்கு பதிலாக முதலில் அந்த கதாபாத்திரத்தில் நடிகை அனுஷ்காவை தான் நடிக்க வைக்க ஆர்.ஜே.பாலாஜி திட்டமிட்டிருந்தாராம். பிறகு சில காரணங்களால் அனுஷ்காவால் நடிக்க முடியாமல் போய்விட்டதால் நயன்தாராவிடம் கதையை கூறி ஆர்.ஜே.பாலாஜி சம்மதம் வாங்கிவிட்டாராம்.

இந்த தகவலை பார்த்த அனுஷ்கா ரசிகர்கள் அனுஷ்கா இந்த திரைப்படத்தில் நடித்திருந்தால்  வேற லேவலாக இருந்திருக்கும் என கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement