• Jul 25 2025

உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்ட மனைவி.. மீன் குழம்பு கேட்ட கமல்.. செய்வதறியாது திகைத்த மயில்சாமி..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

பிரபல நகைச்சுவை நடிகரான மயில்சாமி கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை திடீர் மாரடைப்பால் காலமானார். 57 வயதே ஆன இவரின் மரணம் தமிழ் திரையுலகில் பெரும் அதிவலைகளை ஏற்படுத்தியது. மயில்சாமி மரணமடைந்து ஒரு வாரம் ஆகவுள்ள நிலையில் திரைப்பிரபலங்கள் பலரும் அவர் குறித்த நினைவுகளை பகிர்ந்து வருகின்றனர். 


அந்த வகையில் நடிகர் மயில்சாமி வீட்டு மீன் குழம்புக்கு நடிகர்கள் ரஜினிகாந்தும் கமல்ஹாசனும் ரசிகர்களாக இருந்துள்ளதாக தற்போது தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது மயில்சாமி வீட்டில் சமைக்கும் மீன் குழம்பு என்றால் கமல்ஹாசனுக்கும் ரஜினிகாந்துக்கும் கொள்ளை பிரியமாம்.


இதனால் எப்போது தன் வீட்டில் மீன் குழம்பு சமைத்தாலும் மயில்சாமி உடனே ரஜினிகாந்துக்கும் கமல்ஹாசனுக்கும் கொண்டு சென்று கொடுத்துவிடுவாராம். ஒரு முறை நடிகர் கமல்ஹாசன், மயில்சாமிக்கு போன் செய்து தனக்கு உடனே மீன் குழம்பு வேண்டும் என கூறி விட்டு போனை கட் செய்து விட்டாராம். அப்போது மயில்சாமியின் மனைவி உடல்நலக்குறைவால் ரொம்பவே பாதிக்கப்பட்டிருந்தாராம்.

இதனால் என்ன செய்வதென்று அறியாது திகைத்த மயில்சாமி, பிரபல ஹோட்டலுக்கு சென்று தன் வீட்டு பாத்திரத்தில் அந்த ஹோட்டலில் சமைத்த மீன் குழம்பு வாங்கிக் கொண்டு போய் கமலிடம் கொடுத்தாராம். கமல்ஹாசனும் மீன் குழம்பை சுவைத்து சாப்பிட்டு விட்டு ஹோட்டல் மீன் குழம்பு என்பதைக் கண்டு பிடித்து விட்டாராம். 


பின்பு கடைசியில், ஹோட்டல் பெயரை சொல்லி, அந்த ஹோட்டலில் வாங்கிய மீன் குழம்பு ரொம்ப சுவையாக இருக்கிறது என்றாராம். இவ்வாறு தனது மனைவிக்கு உடம்பு சரியில்லை என்ற தகவலை கூறாமல், கமலின் ஆசைக்காக ஹோட்டலில் மீன் குழம்பு வாங்கிக் கொடுத்த மயில்சாமியின் மனதைப் பலரும் பாராட்டி வருகின்றனர்.

Advertisement

Advertisement