• Jul 24 2025

மாஸ்டர் பிளான் போட்ட மகிழ்திருமேனி - அஜித்தின் ஏகே62 படத்தின் வில்லன் யார் தெரியுமா?

stella / 2 years ago

Advertisement

Listen News!

நடிகர் அஜித் அடுத்தடுத்த படங்களில் தன்னை பிசியாக்கிக் கொண்டு நடித்து வருகிறார். அவரது ஏகே62 படத்தை மகிழ்திருமேனி இயக்கவுள்ள நிலையில், படத்தின் பூஜை எளிமையான அளவில் போடப்பட்டு சூட்டிங் துவங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

 படத்தை விரைவில் சூட்டிங் முடிக்க படக்குழு சார்பில் திட்டமிடப்பட்டுள்ளது.முன்னதாக தடம், தடையறத் தாக்க உள்ளிட்ட படங்களை இயக்கி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் மகிழ் திருமேனி.


 இந்தப் படங்கள் அருண் விஜய்க்கு சிறப்பான கேரியர் பெஸ்ட் படங்களாக அமைந்தன. இந்நிலையில், மகிழ் திருமேனிக்கு அஜித்தின் ஏகே62 படத்தை இயக்கும் வாய்ப்பு தற்போது கிடைத்துள்ளது.

இந்நிலையில் AK 62 படத்தில் அஜித்திற்கு வில்லனாக அருண் விஜய் மற்றும் அருள் நிதியை நடிக்க வைக்க பேச்சு வார்த்தை நடந்து வருகிறதாம். இதனால் இப்படத்தின் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.


இருப்பினும் அருண் விஜய், அருள் நிதி ஆகியோர் ஹீரோவாக வலம் வரும் நிலையில் அஜித்திற்கு வில்லனாக நடிப்பார்களா என ரசிகர்கள் மனதில் கேள்வி எழுந்துள்ளது.கௌதம் மேனன் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான "என்னை அறிந்தால்" படத்தில் அருண் விஜய் மிரட்டல் வில்லனாக நடித்திருப்பார். இவர் இப்படத்தின் மூலம் தான் தமிழ் சினிமாவில் கம்பேக் கொடுத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.   


 


Advertisement

Advertisement