• Jul 23 2025

திருந்தாத ஜென்மங்கள் இருந்தென்ன லாபம்? விஜய் சுயநினைவோடுதான் நடித்தாரா?- மோசமாக விமர்சித்த ராஜேஸ்வரி ப்ரியா

stella / 1 year ago

Advertisement

Listen News!

விஜய், த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், மிஷ்கின், கௌதம் மேனன், மன்சூர் அலிகான் உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் லியோ. இந்தத் திரைப்படம் அக்டோபர் மாதம் 19ம் தேதி பிரமாண்டமாக வெளியாகவுள்ளது. இதனால் இப்படத்தின் ரிலீஸிற்காக ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.

ரொம்பவே எதிர்பார்த்த லியோ ஆடியோ லான்ச் ரத்து செய்யப்பட்டாலும் படத்தின்  போஸ்டர்கள், இரண்டாவது சிங்கிள் என்பன வெளியாகி ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்திருந்தது. இதனை அடுத்து இன்றைய தினம் இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகியது.ட்ரெய்லரை பார்த்த ரசிகர்கள் கண்டிப்பாக இந்தப் படம் மெகா ஹிட்டாகும் என்று ரசிகர்கள் ரொம்பவே நம்பியிருக்கின்றனர்.


இது ஒரு பக்கம் இருக்க விஜய் லியோ ட்ரெய்லரில் கெட்ட வார்த்தை பேசியது அதுவும் ஒரு பெண்ணை இழிவுப்படுத்தும் சொல்லில் பேசியது பெரும் பஞ்சாயாத்தை கிளப்பியிருக்கிறது. இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், "லியோ ட்ரெய்லர் பார்த்தேன். விஜய் சுயநினைவோடுதான் நடித்தாரா? விஜய் கெட்ட வார்த்தை பயன்படுத்தியுள்ளது(1.46 நிமிடத்தில்)அவரது தரத்தை மிகவும் குறைத்துள்ளது.


 பெண்களை இழிவு செய்யும் வார்த்தை விஜய்க்கு வசனமா? திருந்தாத ஜென்மங்கள் இருந்தென்ன லாபம்? என குறிப்பிட்டு விஜய்யை டேக் செய்துள்ளார். மேலும் அவர் ரசிகர்களை தவறாக வழிநடத்தும் விஜய்க்கு எமது கடுமையான எதிர்ப்பினை தெரிவித்து கொள்கிறேன். லோகேஷ் கனகராஜ் தகுதியில்லாத இயக்குநர். திரைப்படத் துறை முன்வந்து இதனை எதிர்க்க வேண்டும்" என குறிப்பிட்டிருக்கிறார்.


Advertisement

Advertisement