• Jul 24 2025

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீசன் 2வில் என்ட்ரியாகவுள்ள வில்லன் யார் தெரியுமா? வெளியானது புதிய அப்டேட்

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் கடந்த 5 வருடங்களாக பரபரப்பாக ஒளிபரப்பாகி வந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் விரைவில் முடிவுக்கு வரவுள்ளது. தற்போதைய சூழ்நிலையில் கூட்டுக் குடும்ப முறை என்பது பலருக்கும் எட்டாத கனியாக இருக்கிறது. பலரும் அதை வெறுத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனாலும் இந்த சீரியலில் அண்ணன் தம்பி ஒற்றுமை மற்றும் கூட்டுக் குடும்பத்தில் சந்தோஷம் துக்கங்களை பற்றி விவரித்து கொண்டு இருக்கிறது.

ஆரம்பத்தில் இந்த சீரியல் ஒவ்வொரு வீட்டிலும் நடப்பது போன்று கதை நகர்ந்து கொண்டிருந்த நிலையில், சமீபத்தில் தனத்திற்கு கேன்சர் வந்தது தான் பெரும் பின்னடைவை சந்தித்தது. 

இதனையடுத்து சீசன் 2 குறித்த செய்திகள் கசியவே ரசிகர்கள் அதிக ஆர்வம் காட்டி வந்தனர். இந்நிலையில், சீசன் 2 விற்கான புரோமோ அண்மையில் வெளியாகி உள்ளது. ஆனால், இதில் ஸ்டாலின் முத்துவை தவிர அனைவரும் புதிதாக என்ட்ரி கொடுத்துள்ளனர். 

குறிப்பாக சுஜிதா, குமரன் தங்கராஜன் போன்ற மக்களுக்கு மிகவும் பேவரைட்டான நடிகர்கள் யாரும் இந்த சீசனில் இடம்பெறவில்லை.இதனிடையே இந்த சீரியலில் ஒரு முக்கிய கேரக்டரில் நடிகர் அஜய் ரத்னம் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 


1989-ம் ஆண்டு வெளியான நாளைய மனிதன் என்ற படத்தின் மூலம் வில்லனாக அறிமுகமான அஜய் ரத்னம் 300 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

தொடர்ந்து மர்மதேசம் (விடாது கருப்பு) என்ற தொலைக்காட்சி தொடரின் ஒரு பகுதியில் அறிமுகமான இவர், பூவே உனக்காக, சத்யா 1, 2 பாரதி கண்ணம்மா, கண்ட நாள் முதல் உள்ளிட்ட பல்வேறு சீரியல்களிலும் நடித்துள்ளார்.

இதேவேளை, புதிய கதை மூர்த்தி தனம் மற்றும் அவர்களின் 3 மகன்களுக்கு இடையில் உள்ள உணர்ச்சிபூர்வமான பிணைப்பைச் சுற்றியே உள்ளதென்பது குறிப்பித்தக்கது.


Advertisement

Advertisement