• Jul 25 2025

இந்தக் குழந்தை யார் தெரியுமா... இவர் தமிழ் சினிமாவின் டாப் ஹீரோயின்களில் ஒருவர்... பிரபல நடிகரின் மனைவியும் கூட..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் புகழ்பெற்ற நடிகைகளில் ஒருவராகத் திகழ்ந்து வருபவர் நடிகை சாயிஷா. இவர் ஏ.எல். விஜய் இயக்கத்தில் வெளிவந்த 'வனமகன்' என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக காலடி எடுத்து வைத்தார்.

அதனைத் தொடர்ந்து பின்னர் விஜய் சேதுபதியின் 'ஜூங்கா', ஆர்யாவின் 'கஜினிகாந்த்', கார்த்தியின் 'கடைக்குட்டி சிங்கம்', சூர்யாவின் 'காப்பான்' எனப் பல படங்களில் நடித்து தன்னுடைய சிறப்பான நடிப்பினை வெளிப்படுத்தி வந்துள்ளார்.


மேலும் கஜினிகாந்த் படத்தில் ஆர்யாவுடன் இணைந்து நடித்த பொது சாயிஷாவிற்கு அவருடன் காதல் மலர்ந்துள்ளது. இதன்பின், இரு வீட்டார் சம்மதத்துடன் கடந்த 2019-ஆம் ஆண்டு இருவருக்கும் பிரமாண்டமாக திருமணம் நடைபெற்றது. இந்த காதல் தம்பதிக்கு Ariana எனும் ஒரு அழகிய பெண் குழந்தை கடந்த 2021-ஆம் ஆண்டு பிறந்தது. 

இந்நிலையில் தற்போது சாயிஷாவின் சிறுவயதுப் புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகின்றன. அதில் அவர் மிகவும் அழகாக இருக்கின்றார். இவரின் இப்புகைப்படத்திற்கு ரசிகர்கள் தமது லக்ஸ்களை அள்ளிக் குவித்து வருகின்றனர்.


Advertisement

Advertisement