• Jul 25 2025

அப்படி ஒரு ஆஃபர் வந்தாலே சூசைட் பண்ணி செத்திடுவன்- ராம் கூறி வார்த்தையால் விபரீத முடிவே எடுக்கத் தயாரான ஷிவின்

stella / 2 years ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் நிகழ்ச்சி துவங்கப்பட்டு, கிட்ட தட்ட ஒரு மாதம் ஆக உள்ள நிலையில்... நிகழ்ச்சி சற்று போர் அடித்து வருவதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள். இதற்க்கு முக்கிய காரணம் கடந்த வாரம் போட்டியாளர்களுக்கு கொடுத்த சுவாரஸ்யம் இல்லாத டாஸ்க் என்றும் கூறலாம்.

எனவே இந்த வாரம், தரமான டாஸ்க் மூலம்... பிக்பாஸ் குழுவினர் நிகழ்ச்சியை மேலும் சுவாரஸ்யமாக்குவார்கள் என எதிர்பார்க்கப்படும் நிலையில், காரணம் இல்லாமல்... கன்டென்ட் கொடுக்க வேண்டும் என்பதற்காக போடப்படும் சண்டைகளும் சற்று குறையும் என்றே தெரிகிறது.


மேலும் பிக்பாஸ் வீட்டிலிருந்து இதுரை சாந்தி மாஸ்டர், ஜி.பி முத்து, அசல் கோலாறு, செரினா என நான்கு பேர் வெளியேறியுள்ளனர். இதில் நேற்றைய தினம் தான் செரினா வெளியேற்றப்பட்டார். இந்த நிலையில் தற்பொழுது ஒரு விடயம் வைரலாகி வருகின்றது. அதாவது பெட்ரூமில் படுத்திருக்கும் போது ராம் விடாது பேசிக்கொண்டிருந்தார். இதனால் கடுப்பான ஷிவின் என்னடா கிழவன் மாதிரி தொடர்ந்து பேசிட்டே இருக்கிற பேசாமல் படுடா என்று சொல்கின்றார்.


இதற்கு ராம் நீ ராஃமால போட்ட கிழவி வேஷம் உனக்கு பக்காவா பொருந்திடுச்சு நான் வெளில போய் ஏதாவது படத்தில கமிட்டானால் உன்னை தான் அம்மாவாக நடிக்க வேண்டும் என்று கூறுகின்றார். அதற்கு ஷிவின் கண்டிப்பாக அப்படி ஒரு ஆஃபர் வந்திச்சு என்றால் நானா சூசைட் பண்ணி செத்திடுவேன் என்னால அப்படி உனக்கு நடிக்க முடியாது என ஜாலியாகப் பேசியிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement